Connect with us

Cinema News

முத்து விஷயத்தினை குடையும் ரோகினி!… அவரு திருப்பி உங்களை கிளறினா மாட்டிப்பீங்க… கம்முனு இரும்மா!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவின் முன் ஒரு லட்சம் பணத்தை வைத்த  சத்யா உங்க அம்மா கிட்ட இருந்து எடுத்த பணம் இது. இனிமே எனக்கு அக்காவை வைத்து அட்வைஸ் பண்ணும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள் என திமிராக கூறுகிறார். முத்து பணத்தை எடுக்காமல் யோசித்துக் கொண்டே இருக்க சத்யா பணம் வேண்டாம் என்றால் நானே எடுத்துக்கிறேன் என்கிறார்.

சத்யா பணத்தை எடுக்கப் போகும் முன்னர் முத்து அந்த பணத்தின் மீது கையை வைத்து விடுகிறார். இது எங்க அப்பா உழைச்சு சம்பாதித்த பணம் உன்ன மாதிரி திருட்டுனது இல்லை எனக் கூறிவிடுகிறார். செல்வத்தை அழைத்து அந்த பணத்தை எண்ணிப் பார்க்கச் சொல்கிறார். மேலும் சத்யா இனிமே அக்காவை அட்வைஸ் பண்ண வீட்டுக்கு அனுப்பாதீங்க என அடாவடியாக பேசுகிறார்.

இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

நான் யாரையும் அனுப்பல என முத்துவும் கடுப்பில் கத்திவிடுகிறார். இருந்தும் சத்யா திமிராக கையில் இருந்த 5 ஆயிரத்து எடுத்துக் கொடுத்து இதை இத்தனை நாள் உங்கள் பணத்தை வைத்திருந்ததற்கு வட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஆனால் முத்து அந்த பணத்தை சத்யா முகத்தின் மீது விட்டெறிந்து இதுதான் உன் பிச்சை காசு எனவும் கோவமாக பேசி விடுகிறார்.

 பின்னர் வீட்டில் விஜயா மீனாவிடம் சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்கவில்லை என திட்டிக் கொண்டிருக்கிறார். டைமுக்கு சாப்பிடணும்னா நீங்க ஜெயிலுக்கு தான் அத்தை போகணும். அங்க தான் மணி அடிச்சா சோறு என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் என மீனாவும் பதிலடி கொடுக்கிறார். பின்னர் மீனாவிடம் பூ வாங்க ஒருவர் வர அவரிடம் பூவை கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்கிறார். இதை பார்த்த விஜயா ஃப்ரிட்ஜில் பூவை ஏன் வைக்கிற எல்லா சாப்பாட்டிலும் பூ மனம் மணக்குது என திட்டுகிறார்.

ரோகினி என் பெயரில் பார்லர் வைத்து எனக்கு பாக்கெட் மணி தருகிறாள். இவ என்ன வாடகையா கொடுக்கிறா எனக் கேட்க அண்ணாமலை ரோட்டுல வச்சிருக்கதுக்கு உனக்கு ஏன் கொடுக்கணும் என்கிறார். அப்போ அங்கு வரும் முத்து அண்ணாமலையிடம் ஒரு லட்சம் பணத்தை நீட்டுகிறார். என்ன என அவர் கேட்க அம்மா தொலைத்த பணம் என்ற உண்மையை சொல்கிறார்.

இதையும் படிங்க: கோபிக்கு வேலை கொடுக்க ரெடியான பாக்கியா… கடுப்பில் இருக்கும் ராதிகா… இது நல்லா இருக்கே?

உடனே ஸ்ருதி புகார் கொடுத்து இருந்தீங்களா என கேட்க விஜயா இல்லை என்கிறார். முத்து நான் எனக்கு தெரிந்த போலீஸ்காரரிடம் சொல்லி வைத்திருந்தேன் என சமாளிக்கிறார். உடனே விஜயா அந்த திருடனை என்கிட்ட கூட்டிட்டு வா அவனை செருப்பால அடிக்கணும் என்கிறார். அப்போ நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என முத்துவும் பதிலடி கொடுக்கிறார். முத்து மீது சந்தேகம் கொள்ளும் ரோகினி அது எப்படி திருடின பணம் சரியா செலவே ஆகாமல் வரும் என கேட்கிறார்.

இதைக் கேட்ட முத்து கிரிமினல் வேலை செய்றவங்களுக்கு தான் இப்படிலாம் சந்தேகம் வரும் என்கிறார். இதனால்  ரோகினி அமைதியாகிவிடுகிறார். ரூமுக்குள் செல்லும் ரோகினி மனோஜிடம் முத்து சொன்னது எதையும் நம்ப முடியவில்லை என்கிறார். மனோஜ் முத்து குடிப்பான் சண்டை போடுவான் கோபப்படுவான் ஆனால் திருட மாட்டான் என சப்போர்ட்டாக பேசுகிறார். இருந்தும் ரோகிணி இந்த திருட்டில் அவருக்கு ஏதோ லிங்க் இருக்கு எனக் கூறுகிறார். இதை வெளியில் இருந்து மீனா பார்த்துக் கொண்டிருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

google news
Continue Reading

More in Cinema News

To Top