மாமா வருவாரா? இல்லையா? குழப்பத்தில் ரோகினி.. ஓவர் சீன் போடுறீங்க விஜயா!...

by Akhilan |
மாமா வருவாரா? இல்லையா? குழப்பத்தில் ரோகினி.. ஓவர் சீன் போடுறீங்க விஜயா!...
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கயித்து கட்டிலில் குடை வைத்து முத்துவும், மீனாவும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருந்தனர். விடிய அந்த ஊரில் இருந்த பெண்கள் எல்லாம் குடையுடன் வீட்டு வாசலுக்கு வருகின்றனர். என்னவென்று மீனா கேட்க புருஷன் கூட தனியா பேச நல்ல ஐடியா என்கின்றனர்.

இதைக்கேட்ட மீனா வெட்கப்படுகின்றார். சரி குடை ஓகே முத்து அதுக்குள்ள லைட் எப்படி எரிஞ்சிது என்கின்றனர். இருவருக்கும் என்ன சொல்வது என்ன தெரியவில்லை. அந்த நேரத்தில் பாட்டி சரியாக உள்ள வாங்க எனக் கூப்பிட முத்துவும், மீனாவும் ஓடி விடுகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே பாடலில் ஒட்டு மொத்த சேட்டைகளையும் செய்த ஜானகி… 80களில் தெறிக்கவிட்ட பாடல்..

அடுத்து, முத்துவும், செல்வமும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ மீனா கோலம் போட்டு முடிக்க என்ன இப்படி வெல்கம் என எழுது என்கிறார் விஜயா. பின்னர் இடத்தினை சுத்தம் செய்ய பரபரப்பாக விழப்போனவரை அண்ணாமலை பிடித்துவிடுகிறார்.

ஏன் இப்படி ஓடுற எனக் கேட்க ரோகினி மாமா வரப்ப சரியா இருக்கணும்ல என்கிறார். பின்னர் மீனாவை அதை சமை, இதை எடுத்து வை என்கிறார் விஜயா. பின்னர் ஸ்ருதி குளிக்காமல் தூங்கி வந்து காபி கேட்க பாட்டி போய் குளிச்சிட்டு வா என அனுப்பி விடுகின்றார்.

இதையும் படிங்க: சொக்கி இழுக்கும் குரல் மூலம் நடிகைகளை மனதில் பதிய வைத்த எஸ்.ஜானகி!. அட இத்தனை பாடல்களா!..

புரவுன் மணி நான் 5 மணிக்கே வந்துட்டேன். வெயிட் செஞ்சேன் இந்தோ வந்துவிடுகிறேன். நீங்க ஆக்‌ஷன் சொல்லிட்டு ரெடியா இருங்க. நான் வந்துட்டே இருக்கேன் எனக் கூறிவிடுகிறார். மாமா வந்து என்ன செய்ய போறாரோ என்ற குழப்பத்தில் ரோகினி இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story