ஓரளவுக்கு தான் பொறுமை… இப்டியே எத்தனை நாளுக்கு உருட்டுவீங்க!... சிறகடிக்க ஆசை கொடுமை

by Akhilan |
ஓரளவுக்கு தான் பொறுமை… இப்டியே எத்தனை நாளுக்கு உருட்டுவீங்க!... சிறகடிக்க ஆசை கொடுமை
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் செல்வம் மலேசியா மாமாவிடம் சரக்கு கேட்க நான் ஐந்து பாட்டில் வாங்கிட்டு வந்தேன் என்கிறார். அப்போ வாங்க போய் எடுத்துட்டு வருவோம் எனக் கூப்பிட மலேசியாவில் இருந்து 2 பாட்டில் தான் எடுத்து வர முடியும்.

நான் ஐந்து பாட்டில் எடுத்து வந்ததால் அதை கஸ்டம் ஆபிஸர் பிடிங்கிக்கிட்டாங்க. மலேசியா சரக்கை விட நம்மூர் சரக்கு தானே நல்லா இருக்கும் எனவும் கூறி சமாளித்து விடுகிறார். இதை தொடர்ந்து முத்துவே அவருக்கு சரக்கு வாங்கி கொடுக்க கடகடவென்று குடித்து விடுகிறார்.

இதையும் படிங்க… இப்படி ஒரு கேள்வி.. ‘லால் சலாம்’ அரங்கத்தையே அதிர வைத்த அஜித்! விஷ்ணு விஷால் செய்த சம்பவம்

மனோஜ் வேண்டாம் அங்கிள் ரோகினி திட்டுவா என சமாளிக்க பார்க்க ஆனால் அவர் மனோஜையே அருகில் உட்கார வைத்து வாயில் வலுக்கட்டாயமாக ஊத்தி விடுகிறார். மனோஜோ அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தடுமாறிக்கொண்டே அங்கிருந்து சென்று விடுகிறார். மலேசியா மாமாவிடம் விஷயத்தை வாங்க முத்து முயற்சி செய்கிறார்.

ஆனால் மலேசியா மாமாவும் சொல்ல தொடங்கி கடைசியில் ஒன்னுமே சொல்லாமல் மட்டையாகி விடுகிறார். முத்து அவரை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வழியில் மனோஜ் விழுந்து இருக்க அவரையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். எங்க அம்மா கொல்ல போகுது என செல்வத்திடம் புலம்புகிறார் முத்து.

இதையும் படிங்க…இவரே ஒழுங்கில்ல… இன்னொரு நடிகருக்கு வாழ்வு கொடுக்கப்போறாரா?.. விஷாலை பொளந்து கட்டிய பிரபலம்

வீட்டுக்கு அழைத்து வந்து இருவரையும் சேரில் உட்கார வைக்கிறார் முத்து. ரோகினியும், விஜயாவும் என்னவென்று கேட்க ஒன்னும் சொல்லாமல் சிலை போல பார்த்து கொண்டு மனோஜ் இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story