Categories: Cinema News latest news television

ஸ்ருதியின் வேலையால் ஓனரான மீனா…மொத்த குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ஸ்ருதி கொடுத்த காசை முத்துவிடம் கொடுத்து தன்னுடைய கவலையை சொல்லுகிறார். நீ தான் அந்த பொண்ணை நல்லவனு சொன்ன. ஆனா அது என்ன வேலை பாத்து இருக்கு என்கிறார். இருந்தும் மீனா இந்த பணத்தை அவங்க மூஞ்சுல அடிச்ச மாதிரி எனக்கு கொடுக்க தெரியலை.

நீங்க ரவி கிட்ட இதை கொடுத்துடுங்க என்கிறார். அடுத்து மீனாவின் வீட்டு கதவை காலையிலேயே யாரோ தட்ட பயந்து போன இந்திரா, சத்யா, சீதா அடிக்க தயாராக வைத்து கொண்டு திறக்க முத்து பயந்து விடுகிறார். என்ன மாப்பிள்ளை இந்த நேரத்துல எதுவும் பிரச்னையா என்கிறார்.

இதையும் படிங்க… விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

மனோஜ், ரவி, ஸ்ருதி, ரோகினி என எல்லாரும் ரொம்ப அலம்பு செய்ய அண்ணாமலை சொன்னவுடனே கிளம்பி வெளியில் வருகின்றனர். வெளியில் மீனா குடும்பத்துடன் அவருடன் பூக்கட்டும் பெண்களும் இருக்க இதுக்காகவா வரச் சொன்ன என்கிறார் விஜயா. வெளியில் வாங்க சர்ப்ரைஸ் என அழைத்து செல்கிறார்.

இதையும் படிங்க… அஜித்துக்கு ஜோடியான கமல் பட நடிகை!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சே!..

இதை பார்த்த மீனாவுக்கு ஆச்சரியம். பின்னர் ரவி ஓனர் அண்ணி பேரு போட்டு இருக்கு என்கிறார். இதை கேட்டு விஜயாவுக்கு கடுப்பாக அண்ணாமலை சந்தோஷமாகி விடுகிறார். உடனே முத்து நீ தான எனக்கு எதுவுமே இல்லனு பீல் பண்ண இந்த ஏரியாலையே உன்னை விட யாரும் ஸ்பீடா பூக்கட்ட முடியுமா எனச் சொல்லிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Akhilan