Categories: latest newstelevision

மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா கத்திக்கொண்டு இருக்க அண்ணாமலை நீ எவ்வளோ கத்துனாலும் பதில் வராது என்கிறார். ஏன் திமிரா எனக் கேட்க மீனா வீட்டிலே இல்லை என்கிறார். நீனே போய் காப்பி போடு என அனுப்பி விடுகிறார். கடுப்பானாலும் காபி போட சமையல்கட்டுக்கு செல்கிறார் விஜயா.

அப்போ ஸ்ருதி அங்கு வர ரவியும் வருகிறார். நான் வேணா காப்பி போடவா என அவர் கேட்க நீ ஹோட்டல் போகணும்ல. சும்மா இரு என மறுத்துவிடுகிறார். அப்போ உள்ளே வரும் ரோகினியிடம் காபி தூள் எங்க இருக்கு தெரியுமா எனக் கேட்கிறார் விஜயா.

இதையும் படிங்க: வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

எனக்கு தெரியாதே ஆண்ட்டி என்கிறார் ரோகினி. மனோஜ் எனக்கு மீட்டிங் இருக்கு சாப்பாடு ரெடி இல்லையா எனக் கேட்க மனோஜ் நக்கலாக பார்க்கிறார். பின்னர் நால்வரும் வெளியில் சாப்பிட்டு கொள்வதாக கிளம்பி விடுகின்றனர். அண்ணாமலையும் நான் பரமுவை பார்க்க போறேன். சாப்பிட்டுக்கிறேன் என்கிறார்.

விஜயா நான் எங்க போய் சாப்பிடுவேன் எனக் கடுப்பில் உட்கார்ந்து இருக்க முத்து சாப்பாடு பார்சலுடன் வருகிறார். எல்லாரும் வெளியில் போயிட்டாங்க என அவர் கூற உங்களுக்கு வேண்டியதை நீங்க எடுத்து சாப்பிட்டுக்கோங்க என்கிறார் முத்து. உடனே வீட்டு வேலைக்கு ஆள் வச்சிக்கோங்க என்றும் கூறுகிறார்.

இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

அடுத்து வீட்டு கதவை யாரோ தட்ட கடுப்பில் எழுந்து திறக்கும் விஜயாவிடம் மாலை வேண்டும் என்கின்றனர். ஆனால் அவரோ அவங்க வீட்டில் இல்ல எனக் கூறி சென்று படுத்துவிடுகிறார். இதனால் தூக்கம் கலையும் விஜயா முழித்தே இருக்கிறார். காலையில் அதை வைத்து வம்பு வளர்க்கிறார். ஸ்ருதியும் ஆண்ட்டி ஹாலில் தூங்குறாங்க. அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும் தானே எனக் கூற பிரச்னை உங்கனால தான வந்துச்சு என்கிறார் முத்து.

ரவி ஏன் முடிஞ்சத பேசுற என்கிறார். ரூம் பிரச்னையை நீங்க தானே ஆரம்பிச்சீங்க. உங்க ரூமை விடவேண்டியதானே என்கிறார் ஸ்ருதி. மனோஜ் என்னை பார்க்க பெரிய ஆளுங்க வருவாங்க. பூவா கொட்டிக்கிடக்கு கொசு வரும் என பந்தா பேசுகிறார். கஸ்டமர் வந்தா எழுப்புங்க. அதவிட்டுட்டு எனத் திட்டிவிட்டு டூட்டி இருக்கு வரேன்பா எனச் சொல்லிவிட்டு முத்து கிளம்பிவிடுகிறார்.

பின்னர் தனக்கு தெரிந்தவர்களுக்கு பூக்கடை நோட்டீஸ் கொடுத்து வருகிறார். அப்போ ஒரு பார்க்கில் மனோஜை பார்க்கிறார். அவர் தன்னுடைய பார்க் நண்பருடன் அமர்ந்து கடலை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இதை முத்து வீடியோ எடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

3 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

8 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago