Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இந்த வார புரோமோ அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. அண்ணாமலை மற்றும் விஜயாவுக்கு மூன்று பிள்ளைகள். இதில் முத்துவினை விஜயாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. அதற்கு வலுவான ப்ளாஷ்பேக் இருக்கும் என நம்பப்படுகிறது.
அதுபோல அவரின் முதல் மகன் மனோஜை திருமணம் செய்து கொண்டு இருக்கும் ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். கஷ்டமான குடும்பத்தில் இருந்து வந்தவர். தன்னை மலேசியாவில் இருந்து வந்த பெரிய வீட்டு பெண்ணாக காட்டிக்கொண்டார்.
இந்நிலையில் கறிக்கடைக்காரர் ஒருவரை தன்னுடைய மாமாவாக நடிக்க வைத்தார். அவர் அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகள் காதலித்து இருக்கும் பையனின் தாய்மாமன் என்பது ட்விஸ்ட்டாக வருகிறது. அவர்கள் திருமணம் கடந்த வாரம் நடந்தது.
Also Read: நடிப்பே வராத அக்கா மவனை வச்சி அசிங்கப்படும் தனுஷ்!.. சுள்ளானுக்கு இதெல்லாம் தேவையா!..
ஆனால் முத்துவிடம் அதிர்ச்சி இல்லாததால் அவர்தான் மண்டபத்தில் பார்த்து அவரை வரச்சொல்லி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணியை பார்த்த மனோஜ் மற்றும் விஜயா ஓவர் சந்தோஷம் கொள்கின்றனர். பிசினஸுக்கு காசு கேட்க வேண்டும் என மனோஜ் பேசுகிறார்.

மணி கையெடுத்து கும்பிட்டு நான் ரோகிணி மாமா இல்லை என்கிறார். ரோகிணியிடம் பொய் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்கிறார். விஜயா ஆன்ட்டி, ஆன்ட்டினு என்ன ஏமாத்திட்டல என கடுப்படிக்க ரோகிணி பேச வரும் போது அவர் கழுத்தினை பிடித்து வெளியில் தள்ளுகிறார்.
இதுவரை ரோகிணியே இதுபோல இரண்டு, மூனு முறை கனவு கண்டு இருப்பதால் இதுவும் கனவாக கூட இருக்கலாம். அல்லது உண்மையை உடைக்கவும் இயக்குனர் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த வாரம் உண்மை உடைந்தால் டிஆர்பி பிச்சிக்கும்.