More
Categories: Cinema News latest news television

என்னங்கப்பா… ரோகினி நாலா பக்கமும் லாக்கை போடுறீங்க… ஆட்டம் சூடு பறக்கும் போலயே!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா பூக்கட்டியே கார் வாங்கி கொடுத்து இருக்கா. இருந்தும் அந்த முத்து ஒரு நாள் அவளை அடிக்கிறான். சில நாள் தான் அவன் நல்லா பாத்துக்கிறான். மனோஜ் உனக்கு நல்ல புருஷனா இருக்கான் என்கிறார்.

ஆனால், மனோஜ் உன்னை எவ்வளோ நல்லா பாத்துக்கிறான் என்கிறார். அவனுக்கு ஒரு வேலை இல்லாம கஷ்டப்படுறான் எனக் கூற சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும் ஆண்ட்டி என்கிறார். இப்போக்கூட அவனுக்கு ஒரு நல்ல வழி பண்றேனு சொல்ல மாட்டிங்குற பாத்தியா என்கிறார். 

Advertising
Advertising

இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…

இப்போ என்ன ஆண்டி பண்றது எனக் கேட்க உங்க அப்பாக்கிட்ட சொல்லி அவனுக்கு ஒரு பிசினஸ் வச்சிக்கொடு எனக் கூறுகிறார். அதுவும் இன்னைக்கே பேசு எனச் சொல்ல ரோகினி அதிர்ச்சி ஆகிவிடுகிறார். அப்பா பிசியா இருப்பாரு எனக் கூற அப்போ உங்க மாமாக்கு கால் போட்டு கொடு நான் பேசுறேன் எனக் கேட்கிறார்.

அவரும் வேலையா இருப்பாரு எனக் கூற புடவை எடுத்து கொரியர் பண்ண முடிஞ்சிது. பேச முடியாதா? என லாக் வைக்கிறார். உடனே இப்போயே கால் பண்ணி கொடு. நான் பேசுறேன் என்கிறார். நான் பேசிட்டு உங்களுக்கு தரேன் என சமாதானம் செய்கிறார் ரோகினி. இன்னைகே பேசணும் எனக் கறாராக சொல்லிவிட்டு செல்கிறார் விஜயா.

இதையும் படிங்க: இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?.. மஞ்சு வாரியரின் திடீர் மாற்றம்!.. எல்லாம் அஜித் பார்த்த வேலை!

ரோகினி கிச்சன் சென்று மீனாவிடம் எப்படி கார் வாங்குனீங்க என துருவி துருவி கேட்டுக்கொண்டு இருக்கிறார். அப்போ வரும் ஸ்ருதி புருஷன் பொண்டாட்டி செலவை யாரும் கேட்பாங்களா என நக்கல் செய்கிறார். பின்னர் அங்கு வரும் ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதியின் தாலி பிரிச்சு கோக்கும் பங்ஷனை கிராண்டாக செய்ய இருப்பதாக கூறுகிறார்.

உடனே விஜயா ரோகினிக்கு செய்யலாம் எனக் கேட்கிறார். ஸ்ருதி அம்மா ரெண்டு பேருக்குமே செய்யலாமே என்கிறார். சரியென அவர் கிளம்பிவிட ரோகினியிடம் உங்க அப்பாவும் பங்ஷன் வரணும் என ஷாக் கொடுக்கிறார். பின்னர் பார்லர் செல்லும் ரோகினி வித்யாவிடம் இந்த விஷயத்தினை கூறுகிறார்.

பாத்துக்கலாம் என வித்யா ஆறுதல் சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்து அவர் அப்பாவிடம் பங்ஷனில் முத்துவை வைத்து பிரச்னை செய்து ஸ்ருதி, ரவியை இங்கே அழைச்சிட்டு வரணும் என திட்டம் தீட்டுகிறார். வீட்டில் முத்து, மீனா கொஞ்சிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: வாங்க படம் பண்ணுவோம்னு சொன்னார்!.. ஆனா மனுசனை பார்க்கவே முடியல!.. அஜித் பற்றி புலம்பும் இயக்குனர்…

Published by
Akhilan

Recent Posts