ரோகிணியை விட ஸ்ருதி சூப்பர் தான்.. சிறகடிக்க ஆசையில் முத்து-மீனா கொண்டாட்டம்!

by Akhilan |
ரோகிணியை விட ஸ்ருதி சூப்பர் தான்.. சிறகடிக்க ஆசையில் முத்து-மீனா கொண்டாட்டம்!
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து வேறு சட்டையுடன் வந்ததை பார்த்து எல்லோரும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போ ஒரு ரவியும் ஸ்ருதியும் வெளியில் வர, என்ன ஆச்சு என்ன பேசிட்டு இருக்கீங்க என்கிறார். உடனே ரோகிணி முத்து ஒரு சட்டையோடு போயிட்டு வேற சட்டையோடு வந்திருக்காரு.

கேட்டா ரெண்டு பேரும் வேற வேற பதில சொல்றாங்க என்கிறார். உடனே சுற்றி டிரஸ் மாத்துறது எல்லாம் ஒரு விஷயமா நான் கூட தான் ஸ்டூடியோவில் இரண்டு மூன்று டிரஸ் மாத்துவேன். எப்பவுமே பேக்ல ஒரு டிரஸ் வைத்திருப்பேன் என்கிறார். இதனால் அந்த விஷயத்தை மீண்டும் பேச முடியாமல் விஜயா வாயை மூடி கொள்கிறார்.

இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

பின்னர் கிச்சனில் இருக்கும் மீனாவிடம் செல்லும் ரோகிணி, முகமே சரியில்லையே என்னாச்சு என்கிறார். மீனா அமைதியாக இருக்க ரோகிணி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். மீனா கடுப்பாகி அது எங்க வீட்டு விஷயம் அமைதியா விடுங்க எனக் கூற இப்ப தெரியுதா அடுத்தவங்களோட பர்சனலா தலையிட்டா எவ்வளவு கோபம் வரும்னு. இனிமே எங்க விஷயத்தை நீங்க தலையிடாதீங்க.

வீட்டில் பங்ஷனுக்காக அலங்கரிக்கின்றனர். அந்த நேரத்தில் சிட்டி ஜெயில் இருந்து வெளியே வருகிறார். அவரைப் பார்க்க சத்யா செல்ல பேசிக் கொண்டிருக்கும்போது முத்துவிற்கும் மீனாவிற்கும் இன்று கல்யாண நாள் என்பதை கூறுகிறார். இதில் உடனே ஒரு பிளானை போடுகிறார் சிட்டி.

கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து நீ போய் ஃபங்ஷனை பாரு. தடபுடலாம் வாங்கிட்டு போ என சொல்லி அனுப்பி விடுகிறார். அங்கே இருக்கும் நண்பர்கள் சிட்டியிடம் உங்களை ஜெயிலுக்கு அனுப்பினவனுக்கு எதுக்கு இதெல்லாம் செய்றீங்க எனக் கேட்கின்றனர். சத்யா இப்போ அங்க போனா முத்து கோவப்படுவான். அவர்களால் சந்தோஷமா இருக்க முடியாது என தன்னுடைய எண்ணத்தை கூறுகிறார்.

இதையும் படிங்க: பார்வையாலே பாடம் நடத்திய விஜயகாந்த்!.. அது புரியாம ‘திருதிரு’வென முழித்த இயக்குனர்…!

பெத்த அம்மாவை பொண்ணுக்கு எதுவும் கொடுக்காமல் இருக்கும்போது நீங்க இவ்ளோ செய்றீங்களே என பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மீனா அந்த தங்க வளையலை ஸ்ருதிக்கு போட்டுவிட்டு இது உங்களுக்கு தான் அழகாக இருக்கு என்கிறார். மீனா மற்றும் முத்து இணைந்து கேக்கை வெட்டுகின்றனர். எல்லோருக்கும் கேக் கொடுத்துக் கொண்டிருக்க ஸ்ருதி அம்மாவிடம் கொடுக்கும் போது நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன் எனக் கூறியதை விஜயாவிடம் கொஅடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story