அதான உழைச்சி சம்பாதிச்சா கையில நிக்கும்… மனோஜுக்கு தொடங்கிய கெட்ட காலம்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் தூங்கி கொண்டே இருக்க குடும்பமே அவரை எழுப்ப போராடுகின்றனர். விஜயா மனோஜை உலுக்கி பார்த்தும் அவர் எழும்ப மறுக்கிறார். இதனால் ஸ்ருதி கலாய்க்க கடுப்பாகும் ரோகிணி டயர்டா இருந்தா தூங்க தான் செய்வாங்க என்கிறார். அப்படின்னு பார்த்தா இந்த வீட்ல மீனாதான் மத்தியானம் வரைக்கும் தூங்கணும். உனக்கு தூக்கம் வரலையா மீனா என்கிறார் ஸ்ருதி.

கடமை இருக்கும்போது நமக்கு எப்படி தூக்கம் வரும் என்கிறார் மீனா. இதை கேட்டு கடுப்பாகும் ரோகிணி நேராக சென்று மனோஜின் முதுகில் மொத்து மொத்துன்னு அடி கொடுக்கிறார். இருந்தும் மனோஜ் எழுந்துக்கொள்ளாமல் இருக்கிறார். இதை பார்த்து கடுப்பாகும் முத்து நேராக சென்று ஜக்கில் இருந்த தண்ணீர் கொண்டு வந்து மனோஜில் மூஞ்சில் ஊற்றி அவரை எழுப்புகிறார். அப்பாவோட 27 லட்சத்தினை சம்பாதித்து கொடுத்துட்டு அப்புறம் நீ தூங்கு என திட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: நல்லவேளை சன் ரைசர்ஸ் டீம் ஜெயிக்கலை!.. இல்லைன்னா ரஜினிதான் காரணம்னு சொல்லியிருப்பானுங்க!..

இதை பார்த்து விஜயா மற்றும் ரோகிணி கடுப்பாகிவிடுகின்றனர். பின்னர் சமையல் கட்டில் இருக்கும் மீனாவிடம் வந்து மனோஜ்க்கு வெரைட்டி வெரைட்டியாக நான்வெஜ் டிஷ்களை செய்ய சொல்கிறார். அடுத்து ரோகிணிக்கு லிஸ்ட் கொடுக்க கடுப்பில் திரும்பவும் மீனா உங்க பெரிய பையனுக்கு என்னால எதுவுமே செய்ய முடியாது என கூறிவிடுகிறார். இதனால் வம்பு செய்யும் விஜயா ஏன் செய்ய முடியாது அவன் ரூம் தரலைனு தானே என கோபமாக பேசுகிறார்.

ஒருநாள் உங்களால ரூம் இல்லாமல் இருக்க முடியாதா? என விஜயா மீனாவை தொடர்ந்து அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்க கடுப்பாகும் மீனா என்ன வேணாலும் பேசுங்க என்னால உங்க பெரிய பையனுக்கு எதுவுமே செய்ய முடியாது. நீங்களே செஞ்சுக்கோங்க என கூறிவிட்டு கிச்சனை விட்டு வெளியேறி விடுகிறார். ஸ்ருதியின் அம்மா வாங்கி கொடுத்த ஏசி அண்ணாமலை வீட்டிற்கு வர முத்து வரை வாசலிலே நிறுத்துகிறார். பின்னர், ஸ்ருதியின் அம்மாவிடம் எங்க வீட்டுக்கு எதுவும் வேணும்னா, நாங்களே வாங்கிப்போம்.

இதையும் படிங்க: விஜயை வச்சு படம் எடுத்து கடனாளியா போறீங்களா? படத்தை டிராப் செய்த தயாரிப்பாளர்

நீங்க எதையும் வாங்கி கொடுக்கணும்னு அவசியம் இல்ல என அந்த ஏசியை திருப்பி அனுப்பி விடுகிறார். இதைக் கேட்கும் வாசுதேவன் அந்த ஏசியை கடையில் ரிட்டன் செய் அத அவங்க குடும்பத்தில் பிரச்சனை கொடுக்கும் என கோல்மூட்டி விடுகிறார். மனோஜ் கடையில் உட்கார்ந்து ஏஜென்டிடம் உங்க ப்ராடக்ட் இன்னும் மூணு மடங்கு அதிகமா சேல் பண்ணுவேன் என பேசிக் கொண்டிருக்கிறார். அந்தநேரத்தில், ஏசியை எடுத்துக்கொண்டு வந்து ரிட்டர்ன் செய்கிறார் ஸ்ருதியின் அம்மா.

என்னாச்சு என மனோஜ் கேட்க ஏசியை நான் உங்க வீட்டுக்கு கிப்ட்டா கொடுக்க தான் வாங்கினேன். உங்க தம்பி தான் அது வேணாம்னு சொல்லி அனுப்பிட்டாரு. அதான் ரிட்டன் பண்ண வந்துவிட்டேன் என்கிறார். மனோஜ் இப்போ உங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க என்னிடம் காசு இல்லையே என தயங்கி நிற்க வேண்டாம் இந்த ஏசியை நீங்களே கிஃப்ட்டா வச்சுக்கோங்க. காசு வேண்டாம் என அவர் கூற மனோஜ் சந்தோஷப்படுகிறார். ஆனால் ரோகிணி வெளியில் சென்று வந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கிறார்.

ஏன்மா இதெல்லாம் எனக்கு. உங்க வீட்டில் நீங்க எல்லாம் நல்லவரா இருக்கீங்க. முத்துவால் தான் எல்லா பிரச்சனையும். அவர் வாங்கி இருந்தா இப்ப உங்களுக்கு இந்த செலவில் இல்லல்ல என சண்டையை மூட்டி விட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: கோட் படத்தை ஓட்ட விஜய் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!..

 

Related Articles

Next Story