ஆபிரேஷனுக்கு ஷேர் கொடுக்கலை..! இதுக்கு மட்டும் ஷேரா? என்ன விஜயா நியாயம்..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து தல தீபாவளி கொண்டாட மீனா வீட்டில் இருக்கிறார். அவர் அம்மா முத்துவுக்கு மோதிரம் போடுகிறார். இல்ல அத்தை சீதா கல்யாணத்துக்கு வச்சிக்கோங்க எனச் சொல்கிறார். ஆனால் மீனா அம்மா இதெல்லாம் முறை எனக் கூறி போட்டு வருகிறார்.
இதையடுத்து முத்து அப்போ இதை உங்க பொண்ணுக்கு போடுங்க. அவங்க தான் காதலிக்கிறவங்களை கல்யாணம் பண்ணி வச்சு நிறைய சாதனை பண்ணிருக்காங்க என்கிறார். வாசலில் முத்துவும், சத்யாவும் வெடி வெடித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்
அப்போ அங்கு வரும் பெண்கள் மீனா தன்னிடம் உதவினு வரவங்களுக்கு மறுக்காம உதவி செய்வா. அதான உன் தம்பிக்கு வீட்டை எதித்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கா எனக் கொளுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் முத்து கோபமாகிறார்.
இதையடுத்து ஸ்ருதியும், ரவியும் தங்கள் தல தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இருவரின் ரொமான்ஸும் ஹை ஸ்பீடில் காதலில் பேசி வருகின்றனர்.
அடுத்து வீட்டுக்கு ஆட்டோவில் வருகின்றனர் முத்துவும், மீனாவும். இதை வாக்கிங் சென்று விட்டு வரும் அண்ணாமலை பார்த்து விடுகிறார். கார் எங்க எனக் கேட்க பைனான்சியர் மகள் வந்து இருப்பதால் ஒரு வாரம் ட்ரிப்புக்கு வேணும் என எடுத்து சென்று இருக்கிறார் என்கிறார்.
இதையும் படிங்க: பாட்ஷா படத்தின் அந்த முக்கிய சீனை தூக்க சொன்ன தயாரிப்பாளர்!.. ரஜினி கொடுத்த வாக்குறுதி!..
மாமியார் வீட்டில எதுவும் போடலையா. கழுத்துல, கையில எதுவுமே இல்ல எனக் கேட்கிறார். மனோஜையும் பார்த்த முத்து என்ன கழுத்துல செயினு, மோதிரத்தை காணும் என்கிறார். மலேசியாவில் இருந்து பார்சல் வரலையா என்கிறார்.
அடுத்ததாக, விஜயா அப்போ ஏழு நாளுக்கு காசு வராதா? செலவு இருக்கு. இப்போ தான் மளிகைக்காரரிடம் சொல்லிட்டு வந்திருக்கேன். நாளைக்கு காசு கொடுக்கணும்ல என்கிறார். அண்ணாமலை ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கட்டுமே எனக் கூறுகிறார்.
சாப்பிடாம இருக்க முடியுமா என்கிறார். உடனே ரோகினி தன்னுடைய ஷேரை கொடுக்கிறார். மனோஜும் கொடுத்து விட்டதாக விஜயா பொய் கூறுகிறார். நீயும் உன் பொண்டாட்டிக்கு தான் சேர்த்து கொடுக்கணும். அவ தான் நிறைய சாப்பிடுறா என்கிறார்.
அப்போ நீங்க மட்டும் கம்மியாவா சாப்பிடுறீங்க எனக் கேட்க மனோஜ் என்ன பாடிஷேமிங் செய்றியா எனக் கூற நீங்க பேசலாம். நான் சொன்னா தப்பா என்கிறார். இதையடுத்து ரூமில் மீனா தனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு சந்தோஷமா இருக்கிறார்.
வெடிலாம் சந்தோஷமா வெடிச்சான். எல்லாம் மறந்துட்டேனு நினைக்காத எனக் கோபமாக சொல்லி விடுகிறார். இதனை தொடர்ந்து முத்து வெளி ட்ராவல்ஸில் போய் கார் கேட்க அந்த பைனான்சியர் யூனியனில் பெரிய இடத்தில் இருக்கிறார். அவர் உனக்கு கார் கொடுக்க கூடாதுனு சொல்லிடாரு. நாங்க பகைச்சிக்க முடியாது எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.