வீட்டுக்கு போக ஆசைப்படும் ரவி.. முரண்டு பிடிக்கும் ஸ்ருதி.. அசிட் அடிக்க காத்திருக்கும் பிஜூ..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலையிடம் விஜயா புகார் சொல்ல அவர் கண்டுக்காமல் சென்று விடுகிறார். ரவி விஷயத்துல முத்து, மீனா மீது கோபமா இருப்பானு நினைச்சா. அதுக்குள்ள சேர்ந்துட்டுங்க எனப் புலம்பி விட்டு செல்கிறார்.
ரூமில் பேசிக்கொண்டு இருக்கும் முத்து, அம்மானு சொன்னதும் வந்து எட்டி பாத்தாங்க பாரு. எங்க அம்மாவுக்கு பாசம் இருக்கு போல என்கிறார். இதையடுத்து காலையில் சீக்கிரம் வேலைக்கு போகணும். எழுப்பி விடு எனக் கூறிவிட்டு படுத்து கொள்கிறார்.
இதையும் படிங்க:அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…
இதையடுத்து காலை விடிந்து விட மீனா பூக்கட்டிக் கொண்டு இருக்கிறார். முத்து எழுந்து விடிஞ்சிட்டா எனக் கேட்க எப்பையோ விடிஞ்சிட்டு என்கிறார் மீனா. எழுப்பி விட சொன்னேன்ல என முத்து கேட்க உடம்பு வலி தானே. அதான் தூங்கட்டும்னு விட்டேன் என்கிறார்.
இதை தொடர்ந்து கால் வலி சரியாகி விட்டதாக முத்து கூற 400 ரூபாய் கொடுங்க என்கிறார் மீனா. எதுக்கு எனக் கேட்க டாக்டர்கிட்ட போனா கொடுத்து இருப்பீங்க தானே. கொடுங்க என்கிறார். அப்போ உங்க வீட்டுக்கு எத்தனை டைம் காரில் கூப்பிட்டு போய் இருக்கேன் என்கிறார் முத்து.
அப்போ நான் செஞ்சதெல்லாம் கணக்கு போட்டா நீங்க பேங்கில போய் கடன் தான் வாங்கணும் என்கிறார். இதை தொடர்ந்து முத்து சாப்பிட வர பூரியை வைக்கிறார் மீனா. கை வலிக்குது என முத்து கூற சரியென ஊட்டி விடுகிறார். சாப்பிட்டு விட்டு ஹாயாக கையை தூக்கி செல்ல வலிக்கலை. காசு கேட்டல அதான் உனக்கு பனிஷ்மெண்ட் என்கிறார்.
இதையும் படிங்க:இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..
இதையடுத்து மனோஜுக்கு ரவி கால் செய்கிறார். வீட்டில் உன்னை கூப்பிடுவதுக்கு வேலை நடப்பதாக கூறுகிறார். அதை தொடர்ந்து இருவரும் பணக்கார மனைவிகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஸ்ருதி அருகில் வரவே காலை கட் செய்து விடுகிறார் ரவி.
இதை தொடர்ந்து ஏன் கட் பண்ண? நான் கட் பண்ணி இருக்கேனா? இனி இது மாதிரி செய்யாதே என்கிறார் ரவி. தொடர்ந்து என்ன சொன்னாங்க எனக் கேட்க வீட்டுக்கு கூப்பிட்டா வர நாங்க ரெடியா இருப்பதாக சொன்னேன் என்கிறார். நீயா எப்படி முடிவு எடுக்கலாம் என்கிறார் ஸ்ருதி. என்னால் அண்ணங்க இல்லாம இருக்க முடியாது எனக் கூற ஸ்ருதி கோபத்துடன் வெளியேறி விடுகிறார்.
ரோட்டில் இருப்பவர்களிடம் போங்க உள்ளே போய் படுத்துக்கோங்க. இவனுக்கு தனியா தூங்க முடியாதாம் எனத் திட்டி விட்டு செல்கிறார். இதையடுத்து பிஜூவின் நண்பர்கள் ஸ்ருதியை கண்டுபிடித்து விடுகின்றனர். அவருக்கு கால் செய்து அந்த பெண் தனியாக செல்வதாக கூற பிடித்து வையுங்க எனக் கூறி விடுகிறார்.
இதையடுத்து ஹோட்டலில் மீனாவை காண வரச் சொல்கிறார் ஸ்ருதி. மீனா என்ன சொல்லுங்க எனக் கேட்க நான் யாருகிட்டையாது பேசணும் நினைக்கிறேன் என்கிறார். உங்க புருஷன்கிட்ட பேசுங்க எனக் கூற அவன் தான் பிரச்னையே. அவனை புரிஞ்சிக்கவே முடியலை என்கிறார். புரிஞ்சிக்காமையா கல்யாணம் பண்ணீங்க என மீனா கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இதையும் படிங்க: 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவிக்கு பதிலா நடிக்கவிருந்தவர் இவரா? என்னய்யா சொல்றீங்க?..