வீட்டுக்கு வந்த அண்ணாமலை கொடுத்த திடீர் ட்விஸ்ட்… முத்துவையே லாக் செஞ்சிட்டீங்களே..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மருத்துவமனையில் அண்ணாமலைக்கு நினைவு திரும்பி விடுகிறது. இதையடுத்து விஜயா நான் ரொம்பவே பயந்து விட்டதாகக் கூறி கண்ணீர் விடுகிறார். அவருக்கு அண்ணாமலை ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

இதையடுத்து ரூமுக்கு வரும் முத்து அண்ணாமலையை பார்த்து கண்ணீர் விடுகிறார். அவருக்கும் அண்ணாமலை ஆறுதல் சொல்கிறார். நான் குடித்துட்டு பண்ணதால தான் இந்த பிரச்னை என அழுகிறார். விடுடா என பேச்சை மாற்றுகிறார். இதையடுத்து மீனாவை கேட்கிறார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…

அவ வந்து என சொல்வதற்குள் இருமல் வர விஜயாவும், முத்துவும் பதறுகின்றனர். இதையடுத்து முத்து விஜயாவுக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுக்கிறார். இதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். விஜயாவை சாப்பிட சொல்கிறார். பிறகு முத்துவும், அண்ணாமலையும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இதையடுத்து அண்ணாமலையை வீட்டுக்கு கூட்டிவருகின்றனர். அப்போ அண்ணாமலை முத்துவின் கார் குறித்து கேட்க செலவு இருக்கு எனக் கூறி விற்ற விஷயத்தினை கூற மறுத்து விடுகின்றனர். வீட்டுக்குள் வரும் அண்ணாமலை முத்துவிடம் ரோகினிக்கிட்ட நடந்தது தப்பு எனக் கூறுகிறார்.

ரோகினியிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதையடுத்து முத்து, மனோஜை அடிக்க வந்தேன். தெரியாம தான். மன்னிச்சிடுங்க எனக் கூறுகிறார். இதையடுத்து ரோகினி எனக்கு மட்டும் இல்ல. இனி மனோஜை கூட அடிக்க கூடாது என்கிறார்.

இதையும் படிங்க: மாலினியின் தில்லாலங்கடியால் குழம்பிய பாக்கியா… அடுத்த கோபியாக மாறிய செழியன்..!

மனோஜ் இனிமே கேர்புல்லா இருங்க, இல்ல மறுபடியும் வலி வந்துடும் என்கிறார். இதனால் முத்து கோபமாக சும்மா இருடா என்கிறார். இதையடுத்து மருத்துவ செலவுக்கு என்ன ஆச்சு எனக் கேட்கிறார். இதையடுத்து விஜயாவிடம் கேட்க, முத்து காரை வித்து தான் செலவு செய்ததாக கூறுகின்றனர்.

உன்னை விட எனக்கு காரா முக்கியம் எனக் கூறி மாத்திரை போட சொல்கிறார். என்னை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிதான என்கிறார். முத்து நீ தான் முக்கியம். இப்படி எல்லாம் பேசாதீங்க என முத்து திட்டுகிறார். வீட்டு பத்திரம் வச்சிருக்கலாமே எனக் கேட்கிறார்.

இதனால் முத்து பத்திரம் பீரோல இல்லை என்கிறார். விஜயா மீனாவை பற்றி தப்பாக பேசுகிறார். இதனால் கடுப்பாகும் அண்ணாமலை பத்திரம் என்கிட்ட தான் இருக்கு. கொடுத்த அன்னைக்கே மீனா என்னை பார்த்து உங்க ரெண்டு பேருக்கிட்ட தான் இருக்கணும் எனக் கூறி கொடுத்து விட்டதாக சொல்கிறார்.

மீண்டும் மீனா குறித்து கேட்கிறார் அண்ணாமலை. ஆனால் அண்ணாமலை மீனா வந்த விஷயத்தினை கூறுகிறார். அவ வந்தால் தான் மாத்திரை போடுவேன், சாப்பாடு சாப்பிடுவேன் என அடம் பிடிக்கிறார். அவ இருந்து இருந்தால் இந்த நிலைமை எனக்கு வந்து இருக்காது என்கிறார். மீனா வரணும் என்கிறார்.

தட்ட முடியாத முத்து மீனாவை கூப்பிட்டு வருவதாக கூறி கிளம்புகிறார். மீனா வீட்டில் அவர் அம்மா எப்போ கிளம்புவ என்கிறார். இதனால் மீனா நான் என்ன பண்றது எனக் கடுப்படிக்கிறார். இதையடுத்து சீதா நான் பேசவா எனக் கேட்கிறார். அவரை அடக்கி விடுகிறார் மீனா அம்மா. இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

 

Related Articles

Next Story