latest news

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கடந்த சில மாதம் முன்பு வரை சிறகடிக்க ஆசை தொடர் தான் மொத்த சீரியல் டிஆர்பியிலும் டாப் இடத்தினை பிடித்தது. ஆனால் ஒரே கதைக்களம் வில்லிக்கு முக்கியத்துவம் என அந்த சீரியல் தொடர் சறுக்கலை சந்தித்தது. இதனால் டிஆர்பியில் சறுக்கி நான்காம் இடம் மட்டும் பிடித்தது. 

இதை தொடர்ந்து சீரியல் கதையில் மாற்றம் தொடர்ந்து செய்யப்பட்டது. ரோகிணியின் சீக்ரெட்டுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டது. ஆனாலும் அது ரசிகர்களிடம் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் கடுப்பை மட்டுமே ஏற்படுத்தியதால் அதுவும் சுவாரஸ்யமாக அமையவில்லை. 

தொடர்ந்து நான்கு முதல் ஏழாம் இடத்தில் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது. இதனால் ரோகிணிக்கு எதிராக கதையை மாற்றினாலும் அவர்கள் விட்ட இடத்தினை பிடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஹீரோ ஹீரோயின் பக்கம் கைவைக்க ப்ளான் செய்துவிட்டதாக தெரிகிறது. 

பூ சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சிந்தாமணிக்கு எதிராக மீனா களமிறங்குகிறார். இதை தெரிந்துக்கொண்டு அவரை கொலை செய்ய ஒரு ஆளை செட் செய்து களத்திற்குள் இறக்க திட்டமிட்டு விட்டார் சிந்தாமணி. அப்படி மீனாவை கொலை செய்ய வரும் ஆள் முத்துவை குத்த போக நடுவில் மீனா வர இருப்பது போல புரோமோ வெளியாகி இருக்கிறது. 

இதனால் மீனாவை மொத்தமாக முடித்துவிட ப்ளான் செய்துள்ளார்களா? இல்லை கொலை முயற்சி போல காட்டி ஹாஸ்பிட்டல் காட்சியில் அடுத்த சில வாரங்கள் ஓட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Akhilan

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

4 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

22 hours ago