Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
ரவி, முத்து அண்ணாமலையுடன் சாப்பிட வர அங்கு அவர்கள் முன் மனோஜ் உட்கார்ந்து செமையாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து மூவரும் சிரிக்க வாங்க சாப்பாடு சூப்பரா இருக்கு எனக் கூறி சாப்பிடுகிறார். பின்னர் அண்ணாமலையுடன் ரவி மற்றும் முத்து அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் போன் பேசிக்கொண்டு இருக்க மூவரும் அவரை பார்க்கவில்லை. தொடர்ந்து அவரை கிராஸ் செய்கின்றனர் மீனாவின் தோழிகள். அவர்கள் மணியிடம் பேச நாங்கதான் டெக்கரேஷன் என்கின்றார். நானும் கேள்விப்பட்டேன் எனக் கூறி யார் என இன்னும் பார்க்கவில்லை என்கிறார்.
அவர்கள் தூரத்தில் மீனாவை கைக்காட்ட அவர்கள் பார்க்காமல் சென்றுவிடுகின்றனர். அதை தொடர்ந்து, ஸ்ருதி போட்டோ எடுத்துக்கொண்டு இருக்க விஜயா அவரை அவருடனும் போட்டோ எடுக்கிறார். பின்னர் ரோகிணி வர அவருடனும் போட்டோ எடுக்கிறார்.

அதை பார்க்கும் மீனா ஏக்கமாக இருக்க அவரையும் ஸ்ருதி போட்டோ எடுக்க அழைக்க விஜயா நழுவி விடுகிறார். பின்னர் ஸ்ருதி மீனாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டு சாப்பிட செல்கிறார். இதை பார்த்த முத்து அண்ணாமலையை அழைத்து வந்து காட்ட விஜயா தன்னுடைய மூன்று மருமகளுடன் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.
அவர்கள் இப்படியே இருந்தா நல்லா இருக்கும் என்கிறார். அருகில் அவர்கள் பேச நாலு ஜோடிகளும் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடு ஊட்டி சிரித்து கொண்டு இருக்கின்றனர். இதை கேமரா மேனை வைத்து போட்டோ எடுக்கின்றனர். பரசுவும் மணியை அண்ணாமலைக்கு அறிமுகம் செய்ய தேடி செல்கிறார்.
Also Read: வசூல்ராஜாவுக்கு ‘நோ’ உத்தமவில்லனுக்கு ‘ஓகே’… பாலசந்தர் முடிவுக்கு இதான் காரணமா?