நம்ம தான் பெஸ்ட் ஜோடி..மனோஜின் உருட்டல்… அடேய் மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே..?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடைய வளையலை அடமானம் வைத்துவந்து விஜயாவிடம் பத்தாயிரம் கொடுத்து விடுகிறார். அப்போது சோபாவில் உட்கார்ந்து இருக்கும் மனோஜும், ரோகினியும் நம்ம ஷேரை கொடுத்துட்டோம் எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போ வரும் முத்து காசு தரணுமா? நாளைக்கு தரேன் எனக் கூற விஜயா இவ இப்போதானே நீ கொடுத்த காசுனு கொடுத்தா? அப்போ எங்கையாச்சும் திருடிட்டு வந்தியா எனக் கேட்கிறார். இதையே ரோகினியும் அவர் காசு தரலைனு சொல்றாரு நீ காசு எப்படி கொடுத்தீங்க எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..
இதனால் கடுப்பாகும் முத்து வீட்டு செலவுக்கு தான் காசு கொடுத்தேன். வட்டி கட்ட அவக்கிட்ட காசு இருந்துச்சு அதை கொடுத்து இருப்பா எனச் சமாளிக்கிறார். இதையடுத்து உள்ளே சென்று காசு எப்படி கிடைச்சுது எனக் கேட்கிறார். சேர்த்து வைத்ததாக மீனா கூற அவ்வளவோ காசையெல்லாம் நான் கொடுக்கலை எனக் கூறி உண்மையை சொல்ல கேட்கிறார்.
இதையடுத்து கையில் வளையில் இல்லாததை பார்த்து ஏன் நகையை வச்ச என்க, உங்களை நக்கலா பேசுனது எனக்கு பிடிக்கலை என்கிறார். சரி அடுத்த மாதம் மூட்டுடலாம் எனக் கூறி விட்டு முத்து செல்கிறார். வேலை கிடைச்சிட்டதாவும் சொல்லி சமாளிக்கிறார்.
பின்னர் மனோஜுக்கு விலையுயர்ந்த செண்ட்டை வாங்கி வந்து கொடுக்கிறார் ரோகினி. இது ரொம்பவே காஸ்ட்லி. துபாய் ஏர் ஹோஸ்டஸிடம் சொல்லி வாங்கி வந்ததாக கூறுகிறார். நம்ம முத்து மீனா மாதிரி சண்டை போடக்கூடாது. நாம தான் பெஸ்ட் ஜோடி எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏழு வருடங்கள் நடிக்காமல் இருந்த கமல்!.. உலக நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?…
இதையடுத்து காலையில் சீக்கிரமாக முத்து கிளம்ப மீனா காரை எடுத்துட்டு வரலையா எனக் கேட்கிறார். எதையோ சொல்லி சமாளித்துவிட்டு கிளம்பிவிடுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் மீனா தோழி முத்து கார் துடைக்கும் வேலை செய்வதை சொல்லி விடுகிறார்.
மீனா அந்த இடத்துக்கு போய் நேரில் பார்க்க முத்து கார் துடைத்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் ஒருவர் தன்னுடைய போனை காணும் எனச் சொல்ல அங்கிருந்தவர்கள் முத்துவின் மீது சந்தேகம் அடைகின்றனர். அந்த நேரத்தில் ஒருவர் வந்து ஜிம்மில் போனை வைத்துவிட்டு வந்ததாக கொடுக்கிறார்.
முத்து ஒரு சாரி கூட கேட்க முடியலை. முன்னாடி மாதிரி இருந்தா தூக்கி போட்டு போய்டுவேன். இப்போ செலவு இருக்கு, கடன் இருக்கு எனக் கூறி வருத்தப்படுகிறார். இதையடுத்து மீனா கவலையுடன் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.