latest news

மீனாவுக்கு ஆரத்தி எடுத்த விஜயா! சொன்னதை செஞ்சிட்டாங்களேப்பா!

Siragadikka aasai: சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்து நடிக்க இருக்கும் எபிசோட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் பரபரப்பு உச்சத்தை எட்டி இருக்கிறது. பெரிய வரவேற்பை பெற்ற சிறகடிக்க ஆசை தொடர் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான காட்சிகளால் ரசிகர்களிடம் ஓரளவு பாராட்டுக்களை பெற்றுள்ளது. அந்த வகையில் பல மாதமாக எதிர்பார்ப்பக்கப்பட்ட ரோகிணியின் கதை வெளிச்சமாகியது. இருந்தும் பெரிய பரபரப்பு இல்லாமல் தெரியாமல் செய்த கேடித்தனத்தை தற்போது ரோகிணி தெரிந்தே செய்கிறார். அது ஒரு புறமிருக்க […]

Siragadikka aasai: சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்து நடிக்க இருக்கும் எபிசோட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் பரபரப்பு உச்சத்தை எட்டி இருக்கிறது. 

பெரிய வரவேற்பை பெற்ற சிறகடிக்க ஆசை தொடர் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான காட்சிகளால் ரசிகர்களிடம் ஓரளவு பாராட்டுக்களை பெற்றுள்ளது. அந்த வகையில் பல மாதமாக எதிர்பார்ப்பக்கப்பட்ட ரோகிணியின் கதை வெளிச்சமாகியது.

இருந்தும் பெரிய பரபரப்பு இல்லாமல் தெரியாமல் செய்த கேடித்தனத்தை தற்போது ரோகிணி தெரிந்தே செய்கிறார். அது ஒரு புறமிருக்க ஸ்ருதியும் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு நீத்துவின் காதல் காரணமாக இருக்கிறது. இதற்கு ரவியால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. 

இன்னொரு புறம் மீனாவையும் வெளியேற்ற சிந்தாமணி திட்டமிட்டார். அதற்கு பொய் சாமியார் ஒருவரை வைத்து மீனாவால் தான் வீட்டில் பிரச்சனை. அண்ணாமலை உயிருக்கே ஆபத்து என சொல்ல வைத்தார். அதற்காக ஒரு ஆக்சிடெண்ட்டையும் செய்ய வைத்து மீனாவை அனுப்பி விட்டார். 

மீனாவும் அண்ணாமலைக்காக அந்த வீட்டில் இருந்து வெளியில் இருந்தார். இந்நிலையில் சீதாவின் தாலி காணாமல் போக அதை திருடிய பெண் அந்த சாமியார் என்பதை கண்டுபிடித்தார். அதன் பின்னர் அவரை பிடித்து வீட்டிற்கு அழைத்தும் வந்தார். 

தொடர்ந்து மீனாவுக்கு எதிராக சாமியார் வேடம் போட்டு பேச வைத்தது ரோகிணி என மாற்றி பேசினார். இதனால் சபதம் போட்ட மாதிரியே மீனாவிற்கு ஆரத்தி எடுத்து வா மருமகளே எனக் கூப்பிட வைத்து உள்ளே அழைத்து வந்துவிட்டார் முத்து. இதனால் அடுத்தடுத்த எபிசோட் பரபரப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

மீனாவுக்கு ஆரத்தி எடுத்த விஜயா! சொன்னதை செஞ்சிட்டாங்களேப்பா! | Cinereporters