அப்பாவுக்காக நாயாய் அழைந்த முத்து..! கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு.. ரோகினிக்கு ஸ்ருதி பரவாயில்ல போல..!

by Akhilan |
அப்பாவுக்காக நாயாய் அழைந்த முத்து..! கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு.. ரோகினிக்கு ஸ்ருதி பரவாயில்ல போல..!
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா அம்மாவுடன் சாமியாரை பார்க்க வருகிறார். அவர் உன்னால யாருக்கும் கஷ்டம் வராது மா. நீ நல்லது தான் செய்வ என்கிறார். இதையடுத்து ஒரு கயிரை எடுத்து மீனாவிடம் கொடுத்து அண்ணாமலைக்கு கட்டி விட சொல்லி அனுப்புகிறார்.

அண்ணாமலை ஆபிரேஷனுக்காக வீட்டை அடமானம் வைக்க பத்திரம் கிடைக்காததால் நேராக பைனான்சியரை பார்க்கும் முடிவுக்கு வருகிறார். அவரை வந்து பார்த்து அண்ணாமலைக்கு ஏற்பட்ட பிரச்னையை சொல்லி 4 லட்சம் கடனாக கேட்கிறார்.

இதையும் படிங்க: பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

அதுக்கு என்ன கொடுத்திடலாம் பத்திரம் என்ன இருக்கு என்கிறார். வீட்டு பத்திரம் காணும் அண்ணே. ஆபிரேஷன் முடிஞ்ச பிறகு எடுத்துட்டு வந்துடுறேன் என்கிறார். ஆனால் பைனான்சியர் உன் குடும்பத்தினை நம்ப மாட்டேன். பத்திரம் எடுத்துக்கிட்டு எல்லாரும் கையெழுத்து போடணும் என்கிறார்.

நான் கொடுப்பேன். நாளைக்கு உங்க அப்பா செத்துட்டா. என் காசுக்கு யார் பொறுப்பு என்கிறார். இதனால் கோபமாகும் முத்து, பைனான்சியர் சட்டையை பிடிக்கிறார். பின்னர் சண்டை போட்டு விட்டு கிளம்புகிறார். பைனான்சியர் முத்து மீது கோபமாகிறார்.

இதையடுத்து ரோட்டில் காரை நிறுத்தும் முத்து, குப்பையில் கிடக்கும் பிள்ளையாரை பார்த்து கதறுகிறார். எங்க அப்பா எவ்வளவோ பண்ணாரு. அவருக்கு பண்ண என்கிட்ட பணம் இல்லை என புலம்பி கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் கார் ஷெட்டில் இருந்து கால் வருகிறது.

மெக்கானிக் கால் செய்து உங்க காரை சூப்பரா ரெடி செய்து இருக்கேன். ஒருத்தர் பாத்துட்டு 4 லட்சத்துக்கு வாங்கிக்கிறேனு கூட சொன்னாரு எனப் பெருமையாக சொல்கிறார். இதை கேட்ட முத்து சந்தோஷமாக யாரு கேட்டா உடனே வரச் சொல்லு காரை வித்துருவோம் என்கிறார். மெக்கானிக் ஷாக்காகி ஏன் எனக் கேட்க அப்பா நிலைமை சொல்கிறார்.

உடனே ஷெட்டுக்கு வந்து காரை விற்று 4 லட்சம் பணத்தை வாங்கி விடுகிறார். இதையடுத்து சீதா ரவிக்கு கால் செய்து அண்ணாமலைக்கு நடந்த விஷயத்தினை கூறுகிறார். இதனால் ரவி அதிர்ச்சியாகி ஹாஸ்பிடல் கிளம்புகிறார். ஸ்ருதி 2 லட்சத்தினை ரவிக்கு அனுப்பி செலவுக்கு வைத்துக்கொள்ள சொல்கிறார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் மகன்களின் வாழ்க்கைக்கு போராடும் பாக்கியா… சைடில் ஜல்சா பண்ணும் அப்பா கோபி..!

ஹாஸ்பிடல் வரும் முத்து அடமானம் வைக்க முடியவில்லை என்பதை கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். ஆனால் காசை ரெடி செய்து விட்டதாக கூறுகிறார். விஜயா எப்படி கிடைச்சிது எனக் கேட்கிறார். காரை விற்றுவிட்டதாக கூற குடும்பமே அதிர்ச்சியாகி விடுகிறார்.

இதற்கடுத்து, மனோஜ் இது ஆபிரேஷன் செலவுக்கு தானே பத்தும். மீதி செலவுக்கு இன்னும் மூணு லட்சமாவது வேண்டுமே எனக் கேட்கிறார். இதை கேட்ட முத்து அதிர்ச்சியில் என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கிறார். விஜயா ஒரு கட்டத்தில் இனி அலைய வேண்டாம் எனக் கூறுகிறார்.

தன்னுடைய வளையல், செயின் மோதிரம் எல்லாத்தையும் கழட்டி கொடுத்து இதை அடமானம் வைத்து செலவுக்கு வச்சுக்கோ என முத்துவிடம் கொடுக்கிறார். ரோகினி கழட்டி தர வேண்டாம் எனக் கூறி விடுகிறார். இதற்கடுத்து மனோஜ் தேங்க்ஸ்டா எனக் கூறுகிறார். முத்து உடனே ஆபிரேஷனுக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார்.இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story