சிறகடிக்க ஆசை: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த விஜயா… மீனா எடுத்த முடிவு..!

by Akhilan |
சிறகடிக்க ஆசை: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த விஜயா… மீனா எடுத்த முடிவு..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் ஸ்ருதி நாங்க மேஜர் தான். என் விருப்பத்தோட தான் திருமணம் நடந்ததாக கூறி விடுகிறார். நானும் ரவிக்கூட தான் இருப்பேன் எனக் கூறி விடுகிறார். இதனால் அண்ணாமலையை ரிலீஸ் செய்து விடுகின்றனர்.

போலீசாரும் இனி நாங்க பண்ண எதுவுமே இல்ல. ரெண்டு குடும்பமா உட்கார்ந்து பேசுங்க எனச் சொல்லி விட்டு செல்கிறார். கையெழுத்து வாங்கிக்கொண்டு அண்ணாமலையை விட்டு விடுகின்றனர். பிறகு ரவி அண்ணாமலையிடம் பேச வர அவர் தள்ளிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: தளபதி 68 பூஜை வீடியோ ரிலீஸ்!.. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என காஸ்டிங்கே கலர்ஃபுல்லா இருக்கே!

அண்ணாமலையை அழைத்து செல்ல காரில் உட்கார சொல்கிறார். மீனாவும் ஏற வர அவனுக்கு சொன்னது தான் உனக்கும். எங்க வீட்டுக்கு இனி நீ வரக்கூடாது. இப்படியே எங்கேயாவது போயிடு என கோபப்பட்டு சொல்கிறார். ஆனால் அண்ணாமலை பேசாம இருடா. மீனா நீயும் வீட்டுக்கு வா என்று அழைத்து விட்டு போகிறார்.

வீட்டுக்கு வந்த அண்ணாமலை இதுநாள் வரை நான் ஸ்டேஷனே சென்றது இல்லை. தண்ணி ஊத்திட்டு உள்ள வரணும்னு சொல்லுவாங்க எனக்கூறி தலையில் தண்ணி ஊற்றிக் கொள்ள முத்து டவல் எடுத்து வந்து அப்பாக்கு துடைத்து விடுகிறார்.

அடுத்து அவரை அப்பாவை சமாதானப்படுத்தி ரூமில் தூங்க வைத்து விட்டு வெளியில் கிளம்பி செல்கிறார் முத்து. அடுத்த சிறிது நேரத்தில் மீனா வீட்டுக்கு வர விஜயா மீனாவை தடுத்து நிறுத்துகிறார். யார கேட்டு நீ உள்ள வந்த வெளியே போ என்று சொல்ல நான் மாமாவ பார்த்து நடந்ததெல்லாம் சொல்வதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

மனோஜ் உடனே முத்துவிற்கு ஃபோன் பண்ணி மீனா இங்கே வந்து இருக்கா என்று சொல்கிறார். முத்துவோ நான் இருக்கிற கோபத்துக்கு அவளை ஏதாவது பண்ணிடுவேன், அவ ஏன் அங்க வந்தா அவளை போக சொல்லு என்று சொல்கிறார்.

கோபமான மீனா அவரே வந்து என்னை கூப்பிடுற வரைக்கும் நான் திரும்பி இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்து முத்து ரவியை தேடி ரெஸ்டாரண்ட் போய் கத்தி கொண்டு இருக்கிறார். அங்கிருப்பவர்கள் ரவி இல்லை என்கின்றனர்.

உடனே அருகில் இருந்த பூந்தொட்டியை உடைத்து விட்டு அவன் இல்லாததால இந்த தொட்டியை உடைச்சிருக்கேன் என்று அந்த பணத்தை கொடுத்துவிட்டு, ரவி வந்தால் சொல் என ஒரு வாட்ச் மேனிடம் சொல்லிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story