சீரியஸாக இருக்கும் அண்ணாமலை.. ரோகிணிக்கு பளார் விட்ட முத்து… சிறகடிக்க ஆசையில் திடீர் திருப்பங்கள்..!

by Akhilan |
சீரியஸாக இருக்கும் அண்ணாமலை.. ரோகிணிக்கு பளார் விட்ட முத்து… சிறகடிக்க ஆசையில் திடீர் திருப்பங்கள்..!
X

இன்றைய எபிசோட்டில் முத்து செல்வத்திடம் சொல்லி மீனாவுக்கு கால் செய்ய அவர் கட் செய்து விடுகிறார். இதனால் மீனா வீட்டுக்கு வரும் முத்து கீழேயே நின்றுகொள்கிறார். செல்வத்தினை மேலே போய் முத்துவை காணோம்னு கேட்டுக்கிட்டு வா என அனுப்புகிறார்.

மீனா வீட்டுக்கு வந்து செல்வம் கதவை தட்டுகிறார். மீனா கதவை திறக்க முத்துவை காலையில் இருந்து காணோம் என நடிக்கிறார். இதற்கு அசராத மீனா உள்ள தான் சாப்பிட்டு விட்டு தூங்குறாரு. முத்துவா என செல்வமே அதிர்ச்சியாகி விடுகிறார்.

இதையும் படிங்க: கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

ஆமா, செல்வம் வந்தா என்னை குடிக்க கூப்பிடுவான் என மீனா நம்பும்படி சொல்ல அவருக்கு தலையே சுத்திவிட கிளம்பிவிடுகிறார். இதையடுத்து மீனா அவர் அம்மாவிடம் அவர் தானா கேட்க சொல்லிருக்காரு என்கிறார். இதையடுத்து முத்துவிடம் மீனா சொன்ன விஷயத்தினை சொல்கிறார்.

எல்லாரும் இருக்காங்கள சரி வா வீட்டுக்கு போகலாம் எனக் கிளம்பிவிடுகிறார். அப்பொழுது அண்ணாமலை, விஜயா ஏன்டா இப்படி குடிச்சிருக்க என்று சத்தம் போடுகின்றனர்.

மனசு சரியில்லப்பா உங்களை இந்த நிலைமைக்கு ரவி பண்ணிட்டானே, ஏற்கனவே மனோஜ் உங்கள அசிங்கப்படுத்தினா இப்ப ரவியும் இப்படி செஞ்சிட்டான். இவங்களால தான் உங்களுக்கு கஷ்டம் என்று சொல்ல உடனே ரோகிணி சண்டைக்கு வருகிறார்.

இதையும் படிங்க: இதுதான் என்னுடைய கடைசி இண்டர்வியூ! லியோவால் படாதபாடு பட்ட மீசை ராஜேந்திரன் – போதும்டா சாமி

இதை பார்த்த அண்ணாமலை நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விடுகிறார். குடும்பத்தினர் ஓடி வந்து அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனை ஓடுகின்றனர். மீனாவுக்கு வீட்டில் ஏதோ தப்பு நடப்பதாக கனவு வருகிறது. இதையடுத்து விஷயத்தினை தெரிந்து ஹாஸ்பிடல் வர விஜயா எல்லாம் உன்னால தான் என திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story