வீட்டுக்கு வந்த மீனா… தன் வேலையை தொடங்கிய விஜயா… பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல..!

by Akhilan |
வீட்டுக்கு வந்த மீனா… தன் வேலையை தொடங்கிய விஜயா… பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா எத்தனை நாளைக்கு இந்த வீட்டிலேயே இருப்ப நீ. உன் புருஷன் வீடு தான் உனக்கு இனி வீடு. வெளியில் தலைக்காட்ட முடியலை என்கிறார். அவர் வந்து என் மேல தப்பு இல்லன்னு என்னை கூப்பிட்டால் தான் போவேன் என மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் வேகமாக வீட்டுக்குள் நுழைகிறார் முத்து. மீனா அம்மா அவரை அழைத்து மீனா பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார். மீனா நான் என்ன தப்பு செஞ்சேன் எனக் கோபமாக கேட்கிறார். முத்து நான் நம்பினவங்களே எனக்கு துரோகம் பண்ணியதாக கூறுகிறார்.

இதையும் வாசிங்க:சாவித்ரியிடம் போட்டி போட்ட சரோஜா தேவி… கன்னட பைங்கிளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் திலகம்…

அதையடுத்து எங்க அப்பா அங்க மாத்திரை சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்கிறார். நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வா என்று முத்து மீனாவை கூப்பிடுகிறார். ஆனால் மீனா நான் வரவில்லை எனக் கறாராக மறுத்து விடுகிறார். இதையடுத்து மீனா அம்மாவும், சீதாவை வலுகட்டாயம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.

இதையடுத்து வீட்டுக்கு வரும் மீனா அண்ணாமலையை பார்த்து கண்ணீர் மல்க நிற்கிறார். இதையடுத்து அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நான் எந்த தப்பும் பண்ணவில்லை. ஸ்ருதிக்கிட்ட பேசணும் சொல்லி தான் ரவி என்னை கோயிலுக்கு கூப்பிட்டு போனாரு என்கிறார்.

அங்க கல்யாணம் நடக்கும் விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க மாமா என்கிறார். நான் பெத்த பசங்களே தப்பு செஞ்சிருக்காங்க. முதலில் மனோஜ் செய்தான். இப்போ ரவி செய்து இருக்கான், உன் மேல கோபப்பட முடியுமா? ஆனா ஒரு வருத்தம் உன் மேல இருக்கு என்கிறார்.

அன்னைக்கு கோயிலுக்கு போவதாக என்கிட்ட சொன்ன நீ ஸ்ருதியை பார்க்கும் விஷயத்தினை மறைச்சிட்டல என்கிறார். அது தப்பு தான் மாமா. அதுக்கு எந்த காரணம் சொல்ல முடியாது எனக்கூறி மீனா மன்னிப்பு கேட்கிறார். பிறகு மீனா மாத்திரை எடுத்து கொடுக்க அண்ணாமலை சாப்பிடுகிறார்.

இதையும் வாசிங்க:மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்

அடுத்து முத்து ரூமில் இருக்கும் போது மீனாவிடம் உன்னை கூப்பிட்டு வந்ததால் மன்னிச்சிட்டேன் என நினைக்காதே. அப்பாவுக்காக மட்டும் தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன். நீ செஞ்ச துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன் எனக் கூறுகிறார்.

இதை வெளியில் இருந்து அண்ணாமலை கேட்டுக்கொண்டு இருக்கிறார். வெளியில் வந்த முத்து அவர் கையை நீவி விடுகிறார். இதையடுத்து அண்ணாமலை மீனாவை திட்டாதேடா. ரவியே கல்யாணம் செஞ்சிட்டு போய் நல்லாதான் இருக்கான். நீங்க ஏன் அவங்களால கஷ்டப்படணும் என்கிறார். இதையடுத்து காலையில் பூரி செஞ்சிருந்த மீனாவை விஜயாவும், ரோகினியும் திட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

எண்ணெய் பொருள் சாப்பிட்டா மாமாவுக்கு ஒத்துக்காது எனக் கூற அண்ணாமலைக்கு தனியாக சாப்பிடு கொடுக்கிறார் மீனா. இதையடுத்து நாங்க சாப்பிட்டாலும் அதானே எனக் கூற முத்துவுக்காக செஞ்சதாக கூறுகிறார். இதையடுத்து அவன் மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கானா? எல்லாரையும் கேட்டு சமைக்க மாட்டியா எனக் கேட்கிறார். இது என்ன ஹோட்டலா என அண்ணாமலை கேட்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Next Story