Siragadikka Aasai: அருணால் காப்பாற்றப்பட்ட சத்யா... முத்துவிற்கு தொடங்கிய சந்தேகம்?

by Akhilan |
Siragadikka Aasai: அருணால் காப்பாற்றப்பட்ட சத்யா... முத்துவிற்கு தொடங்கிய சந்தேகம்?
X

siragadikka aasai

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

சத்யா கடைசியாக நின்ற ஹோட்டலின் சிசிடிவி கேமராவை மீனாவின் உதவியால் முத்து மற்றும் செல்வம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் சத்யாவை சிக்கி தன்னுடைய ஆட்களுடன் வந்து காரில் கடத்தி சென்ற விஷயத்தை தெரிந்து கொள்கின்றனர்.

சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என சைபர் கிரைம் அலுவலகம் சென்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நேரடியாக இதுகுறித்து தங்களால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிடுகின்றனர்.

ஆனால் சீதா அருணிடம் இந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறார். அவர் உடனே சத்யாவின் நம்பரை அனுப்பக்கூறி அவரின் கடைசி லொகேஷனை சீதாவிடம் அனுப்புகிறார். அதை முத்துவிற்கு அனுப்பிய சீதா இதுதான் சத்யாவின் கடைசி லொகேஷன் எனக் கூறுகிறார்.

இந்த நேரத்தில் இந்திரா வந்துவிட சத்யா தொலைந்த விஷயம் குறித்து தெரிந்து கொள்கிறார். அவர் அழுது கொண்டிருக்க மீனா மற்றும் சீதா இருவரும் அவருக்கு சமாதானம் கொடுக்கின்றனர். இருந்தும், மீனா தனக்கு பயமாக இருப்பதாக சீதாவிடம் சொல்கிறார்.

உடனே முத்து இது எப்படி உனக்கு கிடைத்தது என கேட்க என்னுடைய பிரண்டு மூலமா வாங்கினேன் என சமாளித்து விடுகிறார். முத்து மற்றும் செல்வம் இருவரும் அந்த லொகேஷனுக்கு சென்று சிட்டியை அடித்து அவருடைய ஆட்களை அடித்து துரத்தி சத்யாவை காப்பாற்றி விடுகின்றனர்.

அந்த நேரத்தில் சரியாக போலீசும் வர சிட்டி மற்றும் ஆட்களை அவரிடம் பிடித்துக் கொடுக்கின்றனர். ரொம்ப நன்றி சார் ஆனால் நாங்க இங்கே இருக்க இடம் உங்களுக்கு எப்படி தெரியும் எனக் கேட்க எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்கவங்க இன்ஃபார்ம் பண்ணாங்க. லொகேஷனும் அனுப்பினதா சொல்கிறார்.

முத்துவும் சந்தேகத்துடன் கிளம்பி சத்யாவை அழைத்துக் கொண்டு காலேஜுக்கு செல்கிறார். மீனா முத்துவிடம் இருந்து தகவல் வந்து சீதாவிடம் சொல்ல அவர் தனக்குத் தெரியும் என கூறுகிறார். எனக்கே இப்பதான் தகவல் வந்துச்சு எனக் மீனா கேட்க உன் முகத்தில் இருந்த சந்தோஷமே சொல்லிட்டு என சமாளித்து விடுகிறார்.

Next Story