Siragadikka Aasai: நீதுவை வச்சு செஞ்சுவிட்ட மீனா!… ரோகிணியின் புது ப்ளான்… டிஆர்பியில் மாற்றம் வருமா?

Published on: April 13, 2026
---Advertisement---

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள். 

பூக்கடை சங்க தேர்தலில் மீனா ஜெயிச்சுவிட்ட கடுப்பில் சிந்தாமணி உட்கார்ந்து இருக்க அவரை பார்க்க வருகிறார் ரோகிணி. எப்படி மீனா ஜெயிச்சா என ரோகிணி கேட்க எல்லாம் முத்துவால் தான். அவள் எப்படி இனிமே சங்கத்தை நடத்துகிறா பாரு என்கிறார். 

பூ கட்டுறது மட்டும் வேலை இல்ல சங்கத்தில் கணக்கு பார்க்கணும், பிரச்சனையை சரி செய்யணும் என எவ்வளவோ இருக்கு. அதை மீனாவால் பார்க்க முடியாது. பார்க்கவும் விட மாட்டேன். அங்கு இருக்கும் ஆட்களை காசு கொடுத்தால் என் பக்கம் வந்துவிடுவார்கள் என தெம்பாக பேசுகிறார். 

மீனா கொடுத்த ஐடியாவால் ரவி மற்றும் ஸ்ருதியை டூருக்கு அனுப்பும் ஐடியாவில் உள்ளனர். ஆனால் ரெஸ்டாரெண்ட்டை என்ன செய்வது என்பதால் மீனா மற்றும் முத்துவை பார்த்துக்க ரவி சொல்ல முதலில் தயங்கி பின்னர் ஒப்புக்கொள்கின்றனர். 

அடுத்த நாள் இருவரும் ரெஸ்டாரெண்ட்டில் பரபரப்பாக வேலை செய்ய அங்கு நீத்து வருகிறார். ரவி எங்க எனக் கேட்க அவர் பொண்டாட்டியுடன் டூர் சென்று இருப்பதாக சொல்கிறார். என்கிட்ட சொல்லலையே பொக்கெட் ஓபனிங் வராமல் எங்கு சென்றார் எனக் கடுப்பில் திட்டுகிறார். 

அவர் இன்னொருத்தி புருஷன் வெட்கமா இல்லையா எனக் கடுப்படிக்க நீத்து முத்துவை அசிங்கமாக பேசுகிறார். ரெளடி எனத்திட்ட கடுப்பில் மீனா நீத்துவை அடித்து விடுகிறார். இதில் அவரும் கோபத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். ரோகிணி விவாகரத்து வழக்கில் ஒரு ப்ளான் போடுகிறார். 

கிரிஷை அவருடன் கோர்ட்டுக்கு கூட்டி செல்கிறார். மனோஜுடன் விஜயா சென்று இருக்க வக்கீல் இவர்கள் இன்று என்ன செய்வார்களோ எனக் கடுப்பில் இருக்கிறார். நாளை நடக்க இருக்கும் எபிசோட் ரோகிணிக்கு சாதகமாக ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவு கொடுக்கிறார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.