முத்துவை மாட்டிவிட்ட மனோஜ்… கடுப்பான மீனா, ரவி… கொஞ்சம் ஓவருதான்!

by Akhilan |   ( Updated:2025-03-21 03:40:07  )
முத்துவை மாட்டிவிட்ட மனோஜ்… கடுப்பான மீனா, ரவி… கொஞ்சம் ஓவருதான்!
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

இரண்டு பேர் சரக்கடிக்க செல்லும்போது அவர்களை முத்து பிடித்து விடுகிறார். கல்யாண வீட்டிலே இந்த வேலையை செய்கிறீர்களா என அவர் அந்த பாட்டிலை வாங்கி வைத்து கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை தூரத்தில் இருந்து மனோஜ் பார்த்து விடுகிறார்.

இதை நேராக விஜயாவிடம் சென்று உங்களுடைய இரண்டாவது மகன் கல்யாண வீட்டில் குடிப்பதாக போட்டு கொடுத்து விடுகிறார். விஜயா இதை கேட்டு கடுப்பாக அவன் இன்னும் திருந்தலையா அப்பா கிட்ட சொல்லணும். அவர்தான் அவனுக்கு ஓவரா சப்போர்ட் செய்வாரு என கூறுகிறார்.

நேராக அண்ணாமலையிடம் சென்று முத்து குடிப்பதாக போட்டு விடுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் மீனாவிடமும் இதை சொல்லி அவரை திட்டுகிறார். மீனா இதைக் கேட்டு கண்கலங்கி முத்துவை பார்த்து செல்கிறார். அந்த இரண்டு பேர் மீண்டும் குடித்துக் கொண்டிருக்கும் போது நடுவில் சென்ற முத்து மீது சரக்கு ஊத்தி விடுகிறது.

Also Read: ரஜினியின் 50 வருட வெற்றியின் ரகசியம் இதுதான்… அடடே இப்படியும் ஒண்ணு இருக்கா?

அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி சீர் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மனோஜ் மற்றும் ரோகிணி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

நான் மேக்கப் காசை கம்மியா தான் வாங்கி இருக்கேன். லாபமே இல்லை என புலம்புகிறார். சரி மொய் வைக்க வேண்டாம் எனப் பேச ரோகிணி மத்த இரண்டு பேரும் வைப்பாங்க என மனோஜுடன் பேசிக்கொண்டு அருகில் செல்லும் மணியை கண்டுக்காமல் விடுகிறார்.

siragadikka aasai

தொடர்ந்து முத்து தன்னுடைய சட்டையை கழற்றி விட்டு இன்னொரு சட்டையை போட்டவுடன் அவர் மேல் ஸ்மெல் வரவில்லை. இதனால் ரவி மற்றும் மீனா தங்கள் தவறாக புரிந்து கொண்டதாக தயங்குகின்றனர்.

இதைதான் நான் அப்பவே சொன்னேன் என முத்து இருவரையும் திட்டிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் மண்டபத்துக்குள் வரும் போது அந்த இரண்டு பேரை பிடித்து மீனாவிடம் தன்னை நிரூபிக்க முத்து கேள்வி கேட்கிறார். அவர்கள் சரக்கு அடித்துவிட்டு உளறுகின்றனர்.

Next Story