சிறகடிக்க ஆசை: ஸ்ருதியை அலறவிட்ட புது மாப்பிள்ளை… தோழியால் மொக்கை வாங்கிய விஜயா..!

by Akhilan |
சிறகடிக்க ஆசை: ஸ்ருதியை அலறவிட்ட புது மாப்பிள்ளை… தோழியால் மொக்கை வாங்கிய விஜயா..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் விஜயா ரவியை இன்னைக்கு வேலைக்கு போகாத, பொண்ணு வீட்ல வந்துடுவாங்க என்கிறார். ஆனால் முத்து எந்த குடும்பமா இருந்தாலும் அது அப்பாவுக்கு மரியாதை தர குடும்பமா இருக்கணும் என்கிறார். விஜயா கல்யாணம் ரவிக்கு தானா என்ன பேசிட்டு இருக்க என்கிறார்.

மீனா அம்மாலாம் மரியாதையா இருக்காங்கள. ஒன்னு இல்லாத குடும்பம். அதெல்லாம் ஒரு மரியாதை என நக்கல் அடிக்கிறார். தேவையில்லாமல் என் குடும்பத்தினை பத்தி பேசாதீங்க என மீனா கடுப்பாகிறார். உடனே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் அண்ணாமலை அவர் வாயை மூடுகிறார்.

இதையும் வாசிங்க:வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

ரவி எனக்கு இப்போதைக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறுகிறார். விஜயா சமாதானப்படுத்துகிறார். முத்து முதல்ல பொண்ணு வரட்டும் பார்க்கலாம் அதுக்கப்புறம் உனக்கு தோன்றதை செய்யலாம் எனச் சொல்லி விட்டு செல்கிறார்.

புது வீட்டில் போலீஸ் அதிகாரி ஒருவரை பார்க்க வருகிறார். வந்து புதிதாக டிஎஸ்பி வந்து இருக்கிறார். கொஞ்ச நாள் அமைதியாக இருக்க கூறுகிறார். உடனே அதிகாரி கிளம்பி விடுகிறார். புது ஆள் தன்னுடைய மனைவியை அழைத்து பிஜிவை பார்க்க பெண் வீட்டில் வருவதாக கூறுகிறார்.

அங்கு ஸ்ருதி அப்பா அம்மாவுடன் வந்து இறங்குகிறார். பிஜுவும், ஸ்ருதியும் சின்ன வயசு நண்பர்கள் என இருவரும் கூறுகின்றனர். அப்போது தான் ஸ்ருதிக்கு தனக்கு கல்யாண ஏற்பாடு செய்யும் விஷயம் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைகிறார் ஸ்ருதி.

பிறகு பிஜு ஸ்ருதியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்துச் செல்கிறார். பிஜு தன்னை குறித்து ரொம்ப பெருமையாக பேசிக்கொள்கிறார். அப்போது ஸ்ருதி நீங்க என்ன பிசினஸ் செய்றீங்க எனக் கேட்கிறார். அப்போது தான் சிலை கடத்தல் உள்ளிட்ட பல கடத்தல்களை செய்வதை கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதையும் வாசிங்க: பாக்கியலட்சுமி: பிரசவ வலியால் கதறி துடித்த ஜெனி… நான் வரமாட்டேன்… ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த கோபி..!

ஸ்ருதிக்கு ஒரு துப்பாக்கியை கொடுக்க எனக்கு வேணாம் என பயமாகி கூறுகிறார். இதனால் ஷாக்கான ஸ்ருதி டப்பிங் ஸ்டுடியோ திடீரென அழைப்பதாக கூறி கிளம்பி சென்று விடுகிறார். இந்த பக்கம் ரவி வீட்டில் பெண் பார்க்க வருபவர்களுக்கு மீனா சமைத்து கொண்டு இருக்கிறார். பார்வதி விஜயா வீட்டுக்கு வருகிறார்.

விஜயா மீனாவிடம் வந்து இன்னைக்கு எதுவும் பேசக்கூடாது என்கிறார். முத்துவை வெளியே அனுப்பியாச்சா எனக் கேட்கிறார். உங்க புள்ள கிட்ட நீங்களே சொல்லுங்க என மீனா அவர் பக்கமே திருப்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து விஜயாவின் தோழி குடும்பம் வர வாய் நிறைய பல்லுடன் வாங்க வாங்க என விஜயா வரவேற்கிறார். அவர் தோழி நீ இன்னமும் அப்படியே சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க என்று சொல்கிறார். இதில் சிரிப்பை அடக்க முடியாத முத்து இரும்மிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story