Siragadikka Aasai: விஜயாவுக்கு ஆப்பு வைத்த ரோகிணி… இனிமே ஆட்டம் வேற மாதிரி இருக்கும் போலயே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
வித்யா வீட்டுக்கு வரும் ரோகிணி என்ன நீ என்னை கூப்பிடலை எனக் கேட்க அவங்க என் லவ் குரு. பேசாம நீயும் என்கூட வா எனக் கேட்க ரோகிணி அவங்களையே கூப்பிட்டு போ நான் இருக்க பிரச்னையில அங்கெல்லாம் வரலை என்கிறார்.
வித்யா என்ன ஆச்சு எனக் கேட்க என் மாமியார் என்னை பிரிக்க வசியம் வைக்க போறாங்க எனக் கூறுகிறார். ஐயோ இது என்ன புது ட்விஸ்ட்டு. நீ என்ன செய்ய போற எனக் கேட்க நான் மனோஜை அவங்க அம்மாக்கிட்ட இருந்து பிரிக்க போறேன் என்கிறார்.
முருகன் அந்த புரோக்கர் கதிரை அழைத்துக்கொண்டு அண்ணனை பார்க்க போறோம் என்கிறார். அண்ணனிடம் கேட்டு தான் இதை செய்யணும் என கூற நாம் பார்க்க போறது உண்மையான அண்ணன் இல்ல. எனக்கு நிறைய நல்லது பண்ண அண்ணன் என்கிறார்.
முத்துவின் ஷெட்டுக்கு போகும் முருகன் கதிரை அழைத்துக்கொண்டு போக பார்க்க அந்த நேரத்தில் அவருக்கு கால் வருகிறார். முருகனை போக சொல்லி இவர் போனை அட்டர்ன் செய்து அவன் ஏமாந்துவிட்டான். காசை வாங்கிட்டு பாம்பே போகலாம் என்கிறார்.
முத்துவை சந்திக்கும் முருகன் நான் ஒரு பிளாட் வாங்க போகிறேன். அதை நீங்க வந்து பாத்துட்டு ஓகே செய்யணும் எனக் கூற முத்து கண்டிப்பா நான் வரேன் என்கிறார். அவர் கிளம்புறேன் எனக் கூறி அவருடன் முத்து வர போன் வந்ததால் அவர் நின்று விட முருகன், கதிருடன் கிளம்பி விடுகிறார்.

மாந்திரீகரை சந்திக்கும் விஜயா என்னுடைய மகனை ஏமாற்றி மருமகள் திருமணம் செய்துவிட்டதாகவும் அவளை பிரிக்கணும் என்றும் கூறுகிறார். பிரிச்சு என்ன செய்ய போறீங்க எனக் கேட்க அவருக்கு வேறு திருமணம் செய்ய போறேன் என்கிறார்.
மாந்தீரிகரும் கயிறு மந்திரிச்சு கொடுக்க விஜயா சந்தோஷமாக வாங்கிக்கொண்டு கிளம்புகிறார். வெளியில் வரும் பார்வதி ரோகிணிக்கு கால் செய்து நாங்க கிளம்புறோம். நீ மாந்திரீகரை பார்த்துட்டு போ எனக் கூறி செல்கிறார் பார்வதி.
மாந்தீரிகரை பார்க்கும் ரோகிணி என் மாமியாரை அவங்க பையன்கிட்டேந்து பிரிக்கணும் என்கிறார். அவங்க என்னை வாழ விடமாட்டிங்கிறாங்க எனக் கூற மாந்தீரிகரும் கயிறு மந்திரிச்சு கொடுக்கிறார். வீட்டிற்கு வரும் விஜயா கயிறை பூஜை அறையில் வைக்க அதை எடுக்கும் முத்து அண்ணாமலைக்கு கட்டிவிடுகிறார்.
விஜயா ஓடி வந்து அதை அவிழ்க்க கூற ஆனால் முத்து எங்க அப்பா நல்லா இருக்கணும். அதெல்லாம் அவிழ்க்க முடியாது என்கிறார். விஜயா சொல்ல முடியாமல் மெல்ல எபிசோட் முடிகிறது.