சிறகடிக்க ஆசை: ரவிக்கு பெண் பார்க்கும் விஜயா…! ட்விஸ்ட் கொடுத்த அண்ணாமலை…!
Sirakadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா வீட்டில் இருக்கும் அனைவரையும் ஹாலில் கூப்பிட்டு ரவிக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். இதற்கு உடனே கடுப்பான அண்ணாமலை என்ன திடீர் அக்கறை என்று கேட்கிறார். எனக்கு ரவி மேல அக்கறை இல்லன்னு யார் சொன்னது. நானே முத்து முத்தா மூணு பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேன் என்கிறார் விஜயா.
இதை கேட்ட முத்து, அய்யயோ அப்பா எனக்கு அப்படியே புல்லரிக்குதுப்பா. முத்து ஆனா, நான் ஒரே ஒருத்தன் மட்டும் தான் இருக்கேன் என்கிறார். இதற்கு கடுப்பான விஜயா நாக்கு ஸ்லிப் ஆகிவிட்டதாக சமாளிக்கிறார். ஆனால் விஜயாவிடம் ரவிக்கு பரசுவின் பெண்ணை கட்டிக்கொடுக்கும் முடிவில் இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க: அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..
அந்த பெண்ணு பார்ப்பதற்கு அழகாவா இருக்கும். குடும்பமும் சொத்து இல்லாதது என நக்கலாக கூறுகிறார். இதற்கு அண்ணாமலை அழகு மனசுல தான் இருக்கு என்கிறார். இதில் சந்தோஷமான முத்து ரொம்ப நல்ல விஷயம். பரசு மாமா குடும்பம் நல்ல விஷயம். அவர் பொண்ணும் நல்ல பொண்ணு தான். அப்பா நீங்க எடுத்து இருக்க முடிவு சூப்பர் என பாராட்டுகிறார். பெண் முதலில் கேட்டு நீ பரசுவிடம் பேசிட்டு வா. அப்புறம் நம்ம ஃபேமிலியா போலாம் என்கிறார்.
இதற்கிடையில் மனோஜ் பார்க்கில் உட்கார்ந்து எப்படி வேலைக்கே போகாமல் சம்பளம் மட்டும் கொடுப்பது என வெட்டியாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்த ரவியிடம் மீனா, சீக்கிரம் ரெஸ்டாரண்ட் ஆரம்பிங்க. குடும்பம் எல்லாம் வரப்போகிறது. உங்களுக்கு பரசு மாமா பொண்ணை பாத்திருக்கு. அதுக்கு பேசதான் உங்க அண்ணா போய் இருக்கிறார் என்கிறார். இதை கேட்ட ரவி மிகவும் அதிர்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க: தள்ளிப்போகும் தளபதி 68 ஷூட்டிங்!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!.. அட போங்கப்பா!..
எனக்கு இப்போ எதுக்கு கல்யாணம் எனக் கேட்கிறார். உனக்கும் கல்யாண வயசு வந்திடுச்சி எனக் கூறுகிறார் விஜயா. இந்த நேரத்தில் முத்து வீட்டு வந்து எல்லாரையுமே வீட்டின் ஹாலுக்கு அழைக்கிறார். பரசு மாமாகிட்ட பொண்ணு கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா என இழுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
அடுத்ததாக முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை என்ன ஆச்சு பரசு என்ன சொன்னா என்று கேட்க இப்போ நீங்கதான் முத்து நான் பரசு மாமா அவர் என்ன சொன்னாரு அது அப்படியே சொல்றேன் என உட்காருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.