அண்ணாமலையை சமாதானம் செய்த மீனா..! வீட்டுக்கு திரும்பும் ஸ்ருதி-ரவி.. இனி சண்டை களைக்கட்டும் போலயே…

by Akhilan |
அண்ணாமலையை சமாதானம் செய்த மீனா..! வீட்டுக்கு திரும்பும் ஸ்ருதி-ரவி.. இனி சண்டை களைக்கட்டும் போலயே…
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கோவிலில் இருந்து திரும்பி காரில் வந்து கொண்டு இருக்கின்றனர் மீனாவும், முத்துவும். இதை தொடர்ந்து முத்து உன்னை தூக்கிட்டு போய் கையெல்லாம் வலிக்கிது. பசி வேற எடுக்குது. வா சாப்பிட்டு போய்டலாம் என ஹோட்டலுக்கு செல்கின்றனர்.

அதே ஹோட்டலில் ஸ்ருதியும், ரவியும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்த முத்து இங்க வேண்டாம் எனச் சொல்லி கிளம்புகிறார். ஆனால் அவரை சரியாக பார்த்த ரவி, எப்படிடா இருக்க எனக் கேட்கிறார். இதில் முத்து கோபப்பட்டு பேசுகிறார். நான் உன் தம்பி என ரவி கூறுகிறார்.

இதையும் படிங்க: காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..

ரவியை அடிக்க பாய நடுவில் சண்டைக்கு வருகிறார் ஸ்ருதி. அன்னைக்கு போலீஸ் ஸ்டேசனில் அடிச்சீங்க, அப்புறம் ஹோட்டல்ல போய் அடிச்சீங்க. இப்படியே பண்ணிட்டு இருக்கது நல்லா இல்ல சொல்லிட்டேன் என்கிறார். இருந்தும் ரவி முத்துவை சமாதானம் செய்வதிலேயே இருக்கிறார்.

ஸ்ருதி நம்ம என்ன தப்பு செஞ்சோம் என்கிறார். அதற்கு முத்து ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களே அதுவே தப்பு தான் என்கிறார். இதையடுத்து மீனா முத்துவை இழுத்து சென்று விடுகிறார். ஸ்ருதி இவர் இருக்க வீட்டுக்கு தான் என்னை கூப்பிட்டியா எனக் கடுப்படிக்கிறார். இதையடுத்து வீட்டில் விஜயா பார்வதியிடம் ரவியை அழைப்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: செழியன் நிலை கண்டு உருகும் ஜெனி… பாக்கியா பக்கம் மொத்தமாக சாய்ந்த ராதிகா..!

எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை எனக் கூற அண்ணாமலை சரியாக வந்து விடுகிறார். அவர் வந்ததும் ரவியை வீட்டுக்கு கூப்பிடுங்க என்கிறார். இது விஜயா சொல்லி பேசுற மாதிரில இருக்கு என்கிறார் அண்ணாமலை. அந்தநேரத்தில் முத்து, மீனா உள்ளே வந்து ஹோட்டலில் நடந்ததை கூறுகின்றனர்.

இதையடுத்து மீனா, மாமா ரவி அவருக்கு பிடிச்ச பொண்ண நம்ம கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டாரு. நம்ம இத்தனை பேர் இருந்தும் அவர் ஏன் தனியா இருக்கணும். அவங்களை வீட்டுக்கு கூப்பிடலாமே. உங்களுக்கு இதுல நல்ல பேரு தான கிடைக்கும் என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட விஜயா ஆமாம் மீனா கரெக்டா தான் சொல்றா என்கிறார் விஜயா. இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story