இயக்குனரால் வந்த பிரச்சனை!.. பிரின்ஸ் படம் ஓடுமா?... தலைமேல் கைவைத்த சிவகார்த்திகேயன்....
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர். இந்த நிலையில் அனுதீப் கே.வி செய்த செயலால் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளதாம்.
தெலுங்கில் நாராயண புட்டம்ஷெட்டி-வம்சிதார் ஆகியோரின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் “ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ”. இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அனுதீப் கே.வி. “ஜதி ரத்னலு” வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. இந்த நிலையில் “ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ” திரைப்படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கும் எதிரொலித்துள்ளதாம்.
“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த நிலையில் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு ஆந்திரா ரசிகர்களிடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணம் அனுதீப் கே.வி. கதை எழுதி கொடுத்த “ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ” திரைப்படத்தின் தோல்விதான் எனவும் தகவல் வெளிவருகின்றன.
ஆந்திராவில்தான் இந்த நிலை என்றால், தமிழ்நாட்டிலும் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ள கார்த்தியின் “சர்தார்” திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் மந்த நிலையில் இருக்கிறதாம். இதனால் திரையரங்கு உரிமையாளர்களே கவலையில் இருக்கிறார்களாம்.
எனினும், எப்போதும் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த அளவுக்கு தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஆதலால் “பிரின்ஸ்” திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றித் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.