சைரன் நாயகியின் 28வது பிறந்தநாள்!.. எங்கே கொண்டாடி இருக்காரு பாருங்க.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்!..

18 வயதில் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காலை முதலே சினிமா ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் ’ஏ சுழலிக்கு’ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு துணையாக இருக்கும் ரசிகர்களை பிறந்தநாளில் மகிழ்விக்க தாறுமாறான புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
இதையும் படிங்க: அக்காவுக்கு நிச்சயதார்த்தம்!.. 2வது மேரேஜுக்கு ரெடி.. ஜோரா ரெடியான அதிதி ஷங்கர்.. போட்டோஸ் பாருங்க!
மாலத்தீவுக்கு பிரபலங்கள் செல்வதை தவிர்த்துவிட்டு வரும் நிலையில், தனது 28 வது பிறந்தநாளை மொரிஷியஸ் தீவில் குதுகலமாக கொண்டாடி இருக்கிறார். பீச்ல அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
பிரேம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி படத்தில் நடித்திருந்தார். நடிகர் அதர்வாவின் தள்ளிப்போகாதே படத்தில் நடித்தவர் வெகு நாட்களுக்கு பிறகு தற்போது ஜெயம் ரவியின் சைரன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: யாருப்பா அவரு எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு!. ‘அறிவு இருக்கா’ என திட்டியவரை பார்க்க ஆசைப்பட்ட ரஜினி..
பிளாஷ்பேக் காட்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணாக கொஞ்ச நேரம் வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை தந்துவிட்டு சென்றிருக்கிறார். அடுத்ததாக தெலுங்கில் டில்லு ஸ்கொயர் எனும் படம் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரைலர் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு காரணம் மிக நீண்ட லிப் லாக் கிஸ் அந்த ட்ரெய்லரில் இடம் பெற்றிருப்பதுதான்.
அனுபமா மொரிஷியல் தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் அவரது போஸ்ட்டுக்கு கீழ் ஹேப்பி பர்த்டே அனுபமா என பதிவிட்டு வருகின்றனர்.