More
Categories: latest news

கடும் ஜுரத்தில் இருந்த இயக்குனர் திலகம்.. பாடலை பாடி ஜுரத்தில் இருந்து காப்பாற்றிய பிரபல பாடகர்

மழை வருவதற்கு இசை வாசித்தால் மழை வரும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு இசையால் ஒருவரின் உடல் நலம் சரியாகி இருக்கிறது என்றால் யாராலும் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு நடந்திருக்கிறது. இந்திய சினிமாவில் இயக்குனர் திலகம் என போற்றப்படுபவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.

இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் இருந்தவர். பன்முக கலைஞராக இந்த தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 70 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். 1950 களில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார் .

Advertising
Advertising

இதையும் படிங்க: அமரன் ஹிட்டுன்னு யார் சொன்னா?.. எல்லாம் பொய்!.. பொங்கும் கங்குவா பட நடிகர்!..

சிவாஜி ,ஜெமினி ,எஸ் எஸ் ராஜேந்திரன் ,சாவித்திரி ,பத்மினி ,சரோஜாதேவி போன்ற நடிகர்களை வைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியிருக்கிறார் கே எஸ் கோபாலகிருஷ்ணன். அதோடு கே ஆர் விஜயா, பிரமிளா, ஜெயசித்ரா ,பி ஆர் வரலட்சுமி ஆகியவர்களை இந்த தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான்.

கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தை இயக்கியவரும் இவர்தான். பாரதிராஜா மகேந்திரன் பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களின் வரவால் இவருடைய திரைப்படங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்படி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு படத்தை இயக்கும் பொழுது கடுமையான ஜுரம் வந்திருந்ததாம் .

இதையும் படிங்க: என்னது பிகிலை கைதி கதற விட்டுச்சா?!.. கங்குவாவ கதறவிட்டது யாருப்பா!… ப்ளூ சட்டை மாறன் பளார்!…

அதனால் அந்த படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து இருக்கிறார் கே எஸ் கோபாலகிருஷ்ணன். அப்போது பிரபல பாடகர் ஆன  அபிராமி அந்தாதி பாடலுக்காக ஒரு ஊரில் விழா நடக்க அதை முடித்துவிட்டு சீர்காழி கோவிந்தராஜன் இவரை பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஜுரத்தால் அவதியுற்ற கே எஸ் கோபாலகிருஷ்ணனை பார்த்து மிகவும் வருத்தமுற்றாராம் சீர்காழி கோவிந்தராஜன்.

அப்போது கோபாலகிருஷ்ணன் அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடல் பாடுங்கள் என கேட்டாராம் . அவருடைய கணீர் குரலில் சீர்காழி கோவிந்தராஜனும் அபிராமி அந்தாதி பாடலை பாடியிருக்கிறார். அதன் பிறகு மற்றுமொரு பாடலை பாடுங்கள் என கேட்டிருக்கிறார் .அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவரும் இன்னொரு பாடலைப் பாட திடீரென கே எஸ் கோபாலகிருஷ்ணனின் உடல் வியர்த்து ஜுரமே காணாமல் போய்விட்டதாம் .இதை ஒரு கட்டுரையில் சீர்காழி கோவிந்தராஜன் உறுதி படுத்தி இருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts