உன் வாய்ஸ் ஆம்பள மாதிரி இருக்கு!. நடிகையை நிராகரித்த இயக்குனர்கள் – வாய்ப்பு கொடுத்த பாலச்சந்தர்…!

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் வாய்ப்பு வாங்கி வருவது மிகவும் கடினமான காரியமாகும். ஏனெனில் உடல் அழகு, உடல் வடிவம் என அனைத்தையும் வைத்துதான் ஒரு நடிகையை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படிதான் நடிகை சீதாவும் கூட சினிமாவில் அறிமுகமானார்.
சீதாவிற்கு முதல் படம் ஆண் பாவம். ஆண் பாவம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் சீதா. வரிசையாக பெரும் நடிகர்களோடு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் சீதா.

ஆனால் சீதாவின் குரல் சற்று கடினமாக இருப்பதாக உணர்ந்தனர் இயக்குனர்கள். எனவே ஆண்பாவம் திரைப்படத்திலேயே சீதாவை டப்பிங் பேச வேண்டாம் என கூறிவிட்டார் இயக்குனர் பாண்டியராஜன். அடுத்தடுத்து அவர் நடித்த படங்களிலும் டப்பிங்கிற்காக வேறு ஆளையே பேச வைத்தனர்.
இந்த நிலையில் கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் சீதா. அந்த படத்தை இயக்குர் கே.பாலச்சந்தர் இயக்கினார். ஆனால் பாலச்சந்தருக்கு மட்டும் சீதாவின் குரல் பிடித்திருந்தது.

எனவே அவர் சீதாவையே அந்த படத்திற்கு டப்பிங் பேச வைத்தார். தமிழில் சீதா அவருக்கு அவரே டப்பிங் பேசிய முதல் திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. ஆனால் அந்த குரலை வேறு ஒருவரின் டப்பிங் குரல் என நினைத்தார்கள் ரசிகர்கள்.
இதையும் படிங்க: சிவாஜி கணேசனிடம் இருந்த அந்த விஷயத்தை அப்படியே ஃபாலோவ் செய்யும் விஜய்…