மீண்டும் சிவாவுடன் இணையும் ரஜினி... மறுபடியும் முதல்ல இருந்தா!....
சிறுத்தை சிவா, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 5 படங்களை இயக்கியவர். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அண்ணாத்த படத்தை இயக்கினார். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இது ஒரு அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் படமாக வெளிவந்துள்ளது.
ஆனால், ஓவர் செண்டிமெண்ட், அபத்தமான வசனங்கள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, திருப்பாச்சி, வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் கலந்த கலவையாக இப்படம் வெளியானது என சில ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், சில ரசிகர்கள் மற்றும் பெண்களுக்கு இப்படம் பிடித்துள்ளது.
சிவாவின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் அவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏனெனில் நடிகர்களை அவ்வளவு அழகாக கையாண்டு காட்சிகளை எடுப்பதில் கில்லாடி. இந்நிலையில், சிவாவின் இயக்கத்தில் ரஜினி மீண்டும் ஒரு படம் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உன் மூஞ்சிய எவன் பாக்குறான் சொல்லு? உள்ளாடை பனியனில் வேற மாதிரி ஜான்வி கபூர்!
ஏற்கனவே, இப்படத்தை பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா ‘நீங்கள் மீண்டும் தலைவருடன் ஒருபடத்தில் இணைய வேண்டும்’ எனக்கூறியிருந்தார். எனவே, மகளின் ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என தெரியவில்லை.
எப்படி பார்த்தாலும் அடுத்து சூர்யாவை இயக்கவுள்ளார் சிவா. அப்படம் முடிந்த பின்னரே அவர் ரஜினி படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம், அண்ணாத்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே, ரஜினி என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை.
இதையும் படிங்க: ஏம்மா நீயுமா இப்படி?!.. தொப்புளை காட்டி போஸ் கொடுத்த டாக்டர் பட நடிகை…
அண்ணாத்த படத்தின் வசூலை பார்த்த பின்னரே சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது பற்றி ரஜினி முடிவு செய்வார் என அவரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.