
Cinema News
தளபதியுடன் நம்ம குக்வித் கோமாளி நடிகை எடுத்த செல்பி புள்ள!
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கா் நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் தான் சிவாங்கி. இசை குடும்பத்தை சோ்ந்தவரான சிவாங்கி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து அனைத்து தரப்பினரையும் தன் வசமாக்கினார்.
இவரது தாய் மற்றும் தந்தை இருவருமே கர்நாடக இசை பாடகர்கள். சினிமாவிலும் பல பாடல்களை பாடியுள்ளார்கள். அதுமட்டுமின்றி இருவருமே தமிழக அரசிடமிருந்து கலைமாமணி விருது வென்றவர்கள்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்கேன்ற ஒரு பெரும் ரசிக பட்டாளம் உள்ளது. கொஞ்சி கொஞ்சி பேசும் இவரது மழலை சொல்லை கேட்டு ரசிக்காதவர்களை இல்லை என்று சொல்லாம். அது மட்டுமல்லாது அந்த ஷோவில் இவர் செய்யும் அலுட்சாட்டிங்கள் தாங்க முடியாது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின் மீது கிரஷ் கொண்டவர் போல செய்துவரும் அட்ராசிட்டிகளால் ரசிகர்களை கவர்ந்தார். இவரை சுட்டிக்குழந்தை என வர்ணித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடும் அளவிற்கு உயர்ந்தார்.
பசங்க’ படத்தில் இடம்பெற்ற ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்ற பாடல்தான் இவர் பாடிய முதல் பாடல். இதையடுத்து தரேன் குமார் இசையில் வெளியான ‘அஸ்க் மாரோ’ என்ற ஆல்பம் சாங்கை பாடினார்.
இந்நிலையில் நமது இளைய தளபதி விஜய்யுடன் சோ்ந்து நிற்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அவரது இன்ஸ்டாவில் அந்த போட்டோவானது அதிகமான லைக்ஸ் அள்ளி குவித்து கொண்டிருக்கிறது.
ஜாலியோ ஜிம்கானா செட்டில் தான் இந்த அழகிய தருணம் அரங்கேறியது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்வேளா நன்றி சொன்னாலும் பத்தாது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறாா்.
இதை பார்த்து வாயடைத்து போய் நிற்கும் நெட்டிசன்கள் தளபதியுடன் சேர்ந்து போட்டோ எடுக்கும் அளவிற்கு பெரிய ஆளாக மாற விட்டாய் சுட்டி குழந்தை சிவாங்கி என்கின்றனா்.