சூப்பர் ஜோடி!. ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த சிவாங்கி - இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்

Sivaangi: விஜய் டிவியில் ஒரு பாடகியாக மக்களுக்கு பரீட்சையமானவர் சிவாங்கி. மழலைக் குரலில் இவர் பேசி அனைவரையும் வெகுவாக ஈர்த்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டார்.

இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை வேறொரு களத்திற்கு கொண்டு சேர்த்தது. பாடகியாக இருந்து பெற்ற புகழைவிட ஒரு கோமாளியாக சிவாங்கி மக்கள் மத்தியில் நிலைத்து நின்றார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பால் ஒரு சில படங்களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு வந்தது.

இதையும் படிங்க: அந்த நடிகர் கொடுத்த முத்தத்தில் மயங்கி நின்ற திரிஷா.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!…

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பல பாடல்களையும் பாடியிருக்கிறார். இவர் குரல் பேசும் போது மழலையாக இருந்தாலும் பாடும் போது கேட்பதற்கே மிகவும் இனிமையாகத்தான் இருக்கும். குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்த சிவாங்கி ஒரு கட்டத்தில் ப்ரோமோசனாகி குக்காகவும் வந்தார்.

அந்த சீசனில் ஃபைனல் வரை வந்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்தார். இந்த நிலையில் சிவாங்கியின் புகைப்படம் இன்று திடீரென இணையத்தில் டிரெண்டானது. இன்று சிவாங்கியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார்களாம்.

sivaangi

sivaangi

இதையும் படிங்க: டைட்டிலில் சொந்த பெயரை கூட போட முடியாத சோகம்!.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக வந்த காமெடி நடிகர்!..

'லா லா ஹார்ட் நிக்கால' என்ற தலைப்பில் அந்த ஆல்பம் தயாராகி இருக்கின்றது. வீடியோவுடன் வெளியாகும் அந்த ஆல்பத்தை இன்று வெளியிட இருக்கிறார்களாம். அந்த ஆல்பத்தில் இதுவரை பார்த்திராத சிவாங்கியை நாம் பார்க்க இருக்கிறோம்.

ஃபுல் ரொமாண்டிக் மூடில் சிவாங்கியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து ஆடும் அந்த ஆல்பத்தில் ஒரு சில காட்சிகள்தான் இணையத்தில் வெளியாகி வைராலானது. அதன் ஃபுல் ஆல்பம் இன்று மாலை வெளியிட இருக்கிறது. அதில் சிவாங்கி பாடிக் கொண்டே நன்கு ஆடவும் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2-வை அடுத்து லால்சலாம்!.. கடும் அப்செட்டில் ஐஸ்வர்யா.. என்ன நடந்துச்சி தெரியுமா?…

 

Related Articles

Next Story