‘நல்ல நடிகன்’யா நீ... டைரக்டரின் நடிப்பை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்!..
தென்னிந்திய சினிமாவிலேயே தலைசிறந்த நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்த மாபெரும் நடிகன். நடிப்பில் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்தையும் இவரின் படங்களை பார்த்தாலே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்று உள்ள ஏராளமான நடிகர்களில் சிலர் பிலிம் இன்ஸ்டிட்யூட், விஸ்காம் என நடிப்பு சம்பந்தமான படிப்புகளில் தேர்ச்சி பெற்றே சினிமாவிற்குள் நுழைகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பதற்கு இவரின் படங்களே நல்ல அனுபவம் ஆகும்.
இதையும் படிங்க : இந்த ஆண்டில் கோலிவுட்டில் நடந்த டாப் 5 தரமான சம்பவங்கள்… என்னென்னலாம் நடந்துருக்கு பாருங்க!!
நடிப்பில் பல்கலைகழகமாகவே வலம் வந்தார் சிவாஜி கணேசன். இப்படி பட்ட மனிதர் ஒரு இயக்குனரின் நடிப்பை பார்த்து மிரண்டு பாராட்டியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். கே.எஸ்.ரவிக்குமாரிடம் படையப்பா படத்தில் நடித்தார் சிவாஜி.
அந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ரவிக்குமார் ஒரு பேட்டியின் போது நினைவு கூர்ந்தார். படத்தில் ஒரு காட்சியில் தன் சொத்துக்களை எல்லாம் தன் தம்பி மணிவன்னனுக்காக விட்டு கொடுப்பார் சிவாஜி. அப்போது பத்திரத்தில் மகன் ரஜினி, மகள் சித்தாரா மற்றும் மனைவி லட்சுமி என அனைவரும் கையெழுத்து போடுவார்கள்.
அந்த காட்சியை படமாக்கும் போது மகள் கையெழுத்து போடும் போது மட்டும் சித்தாராவின் தலையை சிவாஜி தடவி விட்டு அழும் காட்சியை படமாக்க தயாராக இருந்தனர். உடனே சிவாஜி எங்கே நீ நடித்துக் காட்டு என கூறினாராம்.
உடனே ரவிக்குமார் சித்தாராவின் தலையை தடவியவாறே அழுது காட்டினாராம். அதை பார்த்த சிவாஜி சித்தாரா கையெழுத்து போடும் போது மட்டும் அழ வேண்டும் என கேட்டாராம். அதற்கு பதிலளித்த ரவிக்குமார் ஏனெனில் அது மகள். மகன் எப்படியோ பிழைத்துக் கொள்வான், மனைவி எல்லாவற்றையும் அனுபவித்து விட்டாள். ஆனால் எதையும் பார்க்காத மகளுக்காக ஒன்றுமே செய்யவில்லையே என எண்ணி அழுவான் தந்தை. அதனால் இந்த சீன் நடிக்கும் போது தன் சொந்த மகளாக நினைத்து நடித்ததும் அழுக வருகிறது என்று கூறினாராம்.
இதை கேட்ட சிவாஜி ரஜினியிடம் ‘இவன் ஒரு டைரக்டர் மட்டும் இல்ல, ஒரு நல்ல நடிகன்’ என்று சொன்னாராம். அதை கேட்டதும் எனக்கு எந்த ஆஸ்கார் அவார்டும் வேண்டாம், இந்த வார்த்தையே போதும் என மகிழந்திருக்கிறார் ரவிக்குமார்.