நடிகர்னாலே இவர்கள் தான் !.. வேற யாரையும் சொல்லமாட்டேன்!.. ஆவேசமாக பேசிய சிவகுமார்...

by Rohini |
siva
X

sivakumar

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். என்றும் மாறாத இளமையுடன் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். யோகா, பலவித உடற்பயிற்சிகள் என மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருந்து வருகிறார்.

siva1

sivakumar

இது போக ஓவியத்தில் புகழ்பெற்று விளங்குகிறார். சினிமாவில் புகழைக் கொடுத்தது ரசிகர்கள் என்றாலும் ஓவியம் தான் எனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது என கூறியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் இலக்கியங்கள், புராணங்களிலும் அதிக ஆர்வம் உடையவராக விளங்குகிறார்.

இதையும் படிங்க : விஜய் ,அஜித் படங்கள்னாலே இந்த பிரச்சினை கண்டிப்பா இருக்கு!.. அனுபவத்தை பகிர்ந்த எச்.வினோத்..

கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் பிரபலங்கள் விரும்பும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய போது மிகவும் ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசினார்.

siva2

sivakumar

அதாவது நான் நடிகர் என்றாலும் நல்ல நடிகர் என்ற லிஸ்டில் எப்போதும் என்னை சேர்த்துக் கொள்ளவே மாட்டேன் என்றும் 195 படங்களில் நடித்திருந்தாலும் அந்த லிஸ்டில் என் பெயரை இணைத்துக் கொள்ளவே மாட்டேன் என்றும் கூறினார். மேலும் நடிகனாலே அது சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் தான், வேற யாரையும் அந்த லிஸ்டில் வைக்கவும் மாட்டேன் என்றும் கூறினார்.

சிவாஜி, கமல் இவர்களுக்கு சினிமா தான் மூச்சு. இவர்கள் இருவருடனும் சிவகுமார் நடித்திருக்கிறார். இந்த அளவுக்கு அவர் பேசிய பேச்சின் மூலம் கமல் சிவாஜி மீது எந்த அளவு மரியாதை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

siva3

sivaji kamal

Next Story