என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்....கலைஞனுக்கு கொடுக்கற கூலி ஒரு சொட்டு கண்ணீரு...நெகிழ்ந்த சிவாஜி

by sankaran v |   ( Updated:2022-03-10 02:14:55  )
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்....கலைஞனுக்கு கொடுக்கற கூலி ஒரு சொட்டு கண்ணீரு...நெகிழ்ந்த சிவாஜி
X

sivaji

பொதிகை சேனலுக்காக ஒருமுறை கமல் சிவாஜியிடம் அவரது வீட்டிற்கே வந்து இண்டர்வியு பண்ணினார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்கள் தான் இது.

நாங்க எப்படி நடிச்சாலும் இது சிவாஜி மாதிரியே இருக்குன்னு சொல்றாங்க. எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷனா நீங்க இருக்கிறீங்க. உங்களுக்கு யாரு இன்ஸ்பிரேஷன்னு கமல் கேட்கிறார்.

sivaji kamal

சிவாஜி அமைதியாக பதில் சொல்கிறார். சின்னப்பிள்ளைல இருந்து வித்தியாசமா நடிக்கணும்னு நினைச்சது. ஆங்கிலப்படம் அடிக்கடி பார்ப்பேன். அதுல ஷீக்னு ஒரு படம் பார்த்தேன். அந்த ஹீரோவோட நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

மத்தபடி இதுலாம் அடிவயித்துல இருந்து வர்ற நடிப்பு தான். ட்ரை பண்றது தான். மத்தவங்க சொல்லிக் கொடுத்து வர்றது இல்ல. என்ன கேரக்டர்னு நமக்கு தெரிஞ்சிக்கிட்டா அதை சக்ஸஸ்புல்லா ஆக்கிகிட்டா போச்சு...ஜஸ்ட் லைக் தேட் என சுடக்கு போட்டு சொல்கிறார்.

sivaji

சிவாஜி. அதைக் கேட்டு சிரிக்கும் கமல், உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட். அங்க ஷெட்ல பல பேர் முட்டிக்கிட்டு இருக்காங்க நான் உள்பட. நீங்க சொடுக்கறீங்க...அங்க முதல்ல இருந்தே தாளம் போட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள சாயங்காலம் ஆயிடும்..

நடிகர்களுக்கே வாழ்த்துறதுதான் முக்கியம். அவங்க மென்மேலும் வளரணும்கறதுக்காகத் தான் இப்படி வாழ்த்துறாங்க. கலைஞனுக்கு டானிக் மாதிரி. நம்ம நடிப்ப பார்த்து இது நல்லா இருக்குன்னு ஒரு சொட்டு கண்ணீர் யார் விடுறானோ அது தான் கலைஞனுக்கு கொடுக்கற கூலின்னு கவிஞர் கண்ணதாசனே சொல்லிருக்காரு.

கலைஞனோட நடிப்பப்பார்த்து எவன் ஒருத்தன் உன் நடிப்பு நல்லாருக்குன்னு கண்ணில இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விடுறானோ அது தான் ஒரு கோடி கொடுத்ததுக்குச் சமமனு கவிஞர் கண்ணதாசன் சொல்வார்.

உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு கோடி கொடுத்ததா நெனச்சிக்கிடுறம்பா...நான் உங்கக்கிட்ட இருந்து பல கோடி சம்பாதிச்சிருங்கங்கறதை சந்தோஷத்துல இருந்து உங்க சந்தோஷத்தை உணர முடியுது.

உத்தமபுத்திரன் படத்தைப் பார்த்தீங்கன்னா ரொம்ப மாடர்னா...அந்த கை தட்ற விதம்... நாங்க இன்னிக்கு ஸ்டேஜில ஆடற மாதிரி ரொம்பவே ஸ்டைலா யாரடி நீ மோகினிங்கற பாட்டுல ஆடிருப்பீங்க. அது எப்படி உங்களால முடிஞ்சது?

yaradi nee mohini

அது ரெண்டு நாள் டே, நைட்டா எடுத்தது. அந்த பெருமை ஹிராலாலுக்குத் தான் போகும். இப்படி சொல்றது உங்களோட பலம். உங்க கையில இருக்குற தெம்பு என கமல் புன்முறுவல் பூக்கிறார்.

என்னுடைய வாழ்க்கையைப் பார்த்தீங்கன்னா அது ஒரு திறந்த புத்தகம்.

எனக்குன்னு ஒரு வீடு....எனக்குன்னு ஒரு குடும்பம்னு நான் நினைக்கறதில்ல.

இந்த நாடு தான் என் வீடு. இந்த நாட்டுல உள்ள கோடானு கோடி ஏழை ஜனங்க தான் என் குழந்தைங்கன்னு நெனப்பேன். நான் தங்கியிருக்கற வீட்டப்பத்தி சொல்லணும்னா நான் ஒரு நல்ல கணவன். என் பொஞ்சாதிக்கிட்ட கேளுங்க.

நான் நல்ல தகப்பன். பிரபுகிட்ட கேளுங்க. மொத்தத்துல இந்த பாரதநாட்டின் உடைய சிறந்த குடிமகன் அவ்ளோ தான் சொல்ல முடியும். என்கிறார் சிவாஜிகணேசன்.

Next Story