திருமணத்திற்கு முன்பு சிவாஜியிடம் சொல்ல முடியாமல் தவித்த பத்மினி... அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

Padmini, Sivaji
சிவாஜி, பத்மினி படங்கள் ஜோடின்னா தமிழ்த்திரை உலகமே உச்சி முகர்ந்து வரவேற்கும். இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த படங்களில் தில்லானா மோகனாம்பாள் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.பி.நாகராஜன் இயக்கியுள்ளார். சிவாஜி நாதஸ்வர வித்வானாக வருவார். பத்மினி நாட்டியக்காரியாக வருவார். இருவருக்குள்ளும் மலரும் காதல் காட்சிகள் படத்தில் அவ்வளவு சூப்பராக இருக்கும்.

Padmini. Sivaji2
சிவாஜியும், பத்மினியும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் பணம். இது 1952ல் வெளியானது. சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், வியட்னாம் வீடு, மரகதம், திருமால் பெருமை, ராமன் எத்தனை ராமனடி, அன்பு, இல்லற ஜோதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்குத் தூக்கி, காவேரி, மங்கையர் திலகம், எதிர்பாராதது, ராஜா ராணி, தேனும் பாலும் என 42 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தநிலையில் சிவாஜி 1962ல் செந்தாமரை என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் ஜோடியாக நடித்தவர் பத்மினி. ஆனால் என்ன காரணத்தாலோ இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. பத்மினி திருமணத்திற்கு முன்பு கடைசியாக நடித்த படம் இதுதான். இந்தப் படம் 9 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்ததாம்.
அதாவது 1953ல் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் 1962ல் தான் வெளியானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் பார்க்கும்போது ஏ.பீம்சிங் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரித்தவர் ஏ.எல்.சீனிவாசன்.
மேலும் இந்தப் படத்தில் பத்மினி இரவு முழுவதும் நடித்துவிட்டு மறுநாள் காலையில் தனது திருமணத்திற்காக திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததாம். அந்த நேரத்தில் சிவாஜிகணேசனிடம் பத்மினி ஏதோ மனம் திறந்து சொல்ல நினைத்தாராம். ஆனால் சிவாஜி அப்போது பத்மினியைப் பார்க்க மனமில்லாமல் ஏ.எல்.ஸ்டூடியோவில் இருந்து விரைவாகக் கிளம்பி விட்டாராம்.