சிவாஜி மட்டும் நடிக்கலைனா பிலிமை கொளுத்திடுவேன்!..கோபத்தில் கத்திய தயாரிப்பாளர்....
இயக்குனர் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் ஏவிஎம்.மெய்யப்பச்செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘அந்த நாள்’ திரைப்படம். அந்த திரைப்படத்தில் முழு நேர வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் நடிகர் சிவாஜி.
ஆனால் சிவாஜி அந்த படத்தில் நடிக்க வருவதற்கு படத்தின் இயக்குனர் ஏகப்பட்ட விஷப்பரீட்சைகளில் சிக்கி மீண்டு வந்தார். இதை பற்றி சித்ரா லட்சுமணன் தெரிவித்த போது பல சுவராஸ்யமான தகவல்கள் வெளிப்பட்டன. முதலில் இந்தப் படத்தில் எஸ்.வி.சகஷ்ரானமம் நடித்திருந்தாராம்.
படம் 50% முடிவடைந்த நிலையில் போட்டு பார்த்த மெய்யப்பச்செட்டியாருக்கு வயதானவர் போல் தோற்றமளித்ததால் வேண்டாம் என கூறிவிட பின் கல்கத்தா விஸ்வநாதன் என்ற நடிகரை வைத்து 80 % படத்தை எடுத்துப் போட்டு பார்த்திருக்கின்றனர். ஆனால் அவரை சுத்தமாக பிடிக்கவில்லையாம் மெய்யப்பச்செட்டியாருக்கு.
அதன் பின் இந்த விஷப்பரீட்சை எல்லாம் போதும். இன்னும் தாமதிக்காமல் சிவாஜியை வைத்தே படத்தை எடுத்துவிடலாம் என மெய்யப்பச்செட்டியார் கூற எஸ்.பாலசந்தர் தயங்கினாராம். இதனால் கோபமடைந்த மெய்யப்பச்செட்டியார் தன்னுடைய நிர்வாகியை அழைத்து சிவாஜிக்கு அவர் சம்மதிக்கவில்லையானால் இதுவரை எடுத்த வரைக்கும் பிலிமை அவர் கண்முன்னே கொளுத்திவிடு என கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டாராம்.
இதனால் மனமுடைந்த இயக்குனர் சிவாஜியை போய் பார்த்து பயந்து கொண்டே கதையை சொல்லியிருக்கிறார். பயத்தின் காரணம் என்னவென்றால் அந்த சமயம் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிஸியாக இருந்திருக்கிறார் சிவாஜி.இந்த படம் ஒரு வில்லன் கதாபாத்திரம். ஆகவே கதையை சொல்ல பயந்து சொல்லியிருக்கிறார். கதையை கேட்டதும் சிவாஜிக்கு ஒரே ஆனந்தமாம். ஒப்புக்கொண்டு நடிக்க வந்தார். பின் இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக வளர்ந்தது.