More
Categories: Cinema News latest news

அவன மாதிரி என்னால நடிக்க முடியாது!… மணிரத்னம் படம் பார்த்து ஒப்பனா சொன்ன நடிகர் திலகம்!…

தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இவர். நாடகங்களில் பெண் வேடம் முதல் பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர், சினிமாவில் ஏழை, பணக்காரன், கூலித்தொழிலாளி, டாக்டர், வக்கீல், நீதிபதி, காவல்துறை அதிகாரி, கடவுள் அவதாரங்கள் என பல வேடங்களில் நடித்து ரசிகர்கர்களின் மனதில் குடியேறிவர் இவர்.

அதனால்தான் அவரை நடிகர் திலகம் என ரசிகர்கள் அழைத்தனர். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரும் இவர்தான். அவருக்கு பின்னால் வந்த பல நடிகர்களும் சிவாஜியை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டனர். ஆனால், இப்போது வரை அவரப்போல ஒரு நடிகரை யாராலும் பார்க்க முடியவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்னங்கடா மறந்துட்டீங்களா? நான் இருக்கேன் – திடீரென வெடிக்கும் அஜித் விஜய் உச்சக்கட்ட மோதல்

அதேநேரம், ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் சிவாஜிக்கு பின் சிறந்த நடிகராக பார்க்கப்படுகிறார். இவரும் சிவாஜியை போலவே பட வேடங்களில் நடித்து அசத்தியவர்தான். சிவாஜியிடம் மிகவும் நெருக்கமாக பழகியவர் இவர். தேவர்மகன் திரைப்படத்தில் கமல் – சிவாஜி காம்பினேஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒருபக்கம், கமலின் நடிப்பை சிவாஜியும் பலமுறை பாரட்டி பேசியுள்ளார். தனக்கு அடுத்து கமல்ஹாசன் இருப்பதாக பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், சரண்யா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 197ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன்.

இப்போது வரை தமிழ் சினிமாவில் நாயகன் திரைப்படம் ஒரு கிளாசிக் படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த திரைப்படத்தை மணிரத்னமும், கமலும் இணைந்து அவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருந்தனர். இந்த படத்தில் 10 வயது சிறுவன், நடுத்தர வயது, 70 வயது முதியவர் என கமல்ஹாசன் நடிப்பில் பல வெரைட்டிகளை காட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த சிவாஜி ஒரு குறிப்பிட்ட காட்சியில் கமல் சைகை காட்டியே நடிப்பதை சுட்டிக்காட்டி ‘ஒரு கையை காட்டியே அந்த சீன முடிச்சிட்டான். என்னால அப்படி நடிக்கவே முடியாது’ என பாராட்டினாராம்.

இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்துறதுக்கே இந்தப் படத்தை எடுத்தீயா? பாக்யராஜ் படத்தால் எம்ஜிஆருக்கு நேர்ந்த சோகம்

Published by
சிவா

Recent Posts