நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த்திரை உலகின் பொக்கிஷம். அவர் இருக்கும் போதும் சரி. இறந்த பின்னும் சரி. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வார்கள். அது போலத் தான் சிவாஜியும். அவர் இறந்த பின்னும் கூட அவரது படங்களை வைத்து இன்று பலரும் நல்லா சம்பாதித்து வருகிறார்கள். அவரது நடிப்பைக் கலையாகக் கொண்டு இளம் நடிகர்கள் கற்று வருகிறார்கள்.
அப்பேர்ப்பட்ட நடிகர் திலகம் அவருக்குப் பின் வந்த இரு ஜாம்பவான்களான கமல் மற்றும் ரஜினியுடன் இணைந்தும் நடித்துள்ளார். கமலுடன் அவர் பல படங்களில் நடித்தாலும் தேவர் மகன் தான் மறக்க முடியாதது. அதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமான கமலுடன் பார்த்தால் பசி தீரும் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வந்த உருவங்கள் மாறலாம், நாம் பிறந்த மண், நட்சத்திரம், சினிமா பைத்தியம் ஆகிய படங்களைச் சொல்லலாம். குழந்தையாக இருந்த கமல் தான் பிரபுவைக் காட்டிலும் அதிக முறை சிவாஜியின் மடியில் தவழ்ந்து வளர்ந்தவராம்.
அதே போல ரஜினிகாந்த் சிவாஜியை அப்பா ஸ்தானத்தில் வைத்து அப்பா என்று தான் அழைப்பாராம். ரஜினி சிவாஜியுடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன், படிக்காதவன், விடுதலை, படையப்பா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவரும் தந்தை மகன் உறவு போல தான் பழகி வந்தனர். சிவாஜி ஒருமுறை ரஜினியிடம் ‘என் சாவுக்கு நீ வருவியா?’ என்று கேட்டாராம்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி ஏம்ப்பா இப்படி பேசுறீங்கன்னு கேட்டாராம். அதற்கு சிவாஜி ‘எனக்கு வயசாயிட்டுப் போகுது. நீ பெரிய நடிகனாயிட்டே. எங்காவது வெளிநாட்டுல சூட்டிங்ல இருந்தா வர முடியுமோ இல்லையோ அதான் கேட்டேன்’ என்றாராம்.
ரஜினி அவரது கைகளைப் பற்றிக் கொண்டு உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் வருவேன் என்றாராம். 2001, ஜூலை 7ம் தேதி சிவாஜிகணேசன் காலமானார். ரஜினி சொன்னது போலவே வந்து நடிகர் திலகத்துக்கு அஞ்சலி செலுத்தினார். சிவாஜியின் உடலை ஏற்றும் வேனில் சென்று மின்மயானத்தில் அவரது உடலை எரியூட்டும் வரை நின்று உடன் இருந்தார்.
தான் வியந்து பார்த்த மாபெரும் நடிகரான சிவாஜியுடன் இணைந்து நடித்து அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதில் ரஜினியின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகி விட்டது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…