இந்த வேடத்தில் நடிக்க மாட்டேனு சிவாஜியா சொன்னது?..எந்த படம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..
தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை. இவரின் நடித்த கதாபாத்திரங்கள் வாயிலாக தான் சரித்திரத்தில் இடம் பெற்ற மன்னர்களையும் அரசர்களையும் இவர் வாயிலாக நாம் காண முடிந்தது. அந்த அளவுக்கு தன் அசாத்திய நடிப்பால் அனைவரையும் கண் இமை உயர வைப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
பராசக்தியில் ஆரம்பித்த இவரது பயணம் 4 தலைமுறைகளை கடந்து இன்று மாபெரும் சக்தியாக உருப்பெற்று நிற்கின்றது. நடிப்பின் அரக்கன், நடிப்பின் அசுரன் என நடிப்பிற்காக தன் உயிரையும் கொடுக்கும் திறன் பெற்ற சிவாஜி கணேசன் ஒரு வேடத்தில் நடிக்க மட்டும் மறுத்திருக்கிறார்.
என்ன படம் தெரியுமா? திருவிளையாடல் படத்தில் சிவன் வேடமிட்டு நடிக்க ஒப்புக் கொள்ளவே இல்லையாம். அந்த படத்தின் இயக்குனர் கே.பி. நாகராஜன் ஆரம்பத்தில் நாடகங்களை இயக்கும் பணியில் இருந்திருக்கிறார். திடீரென தோன்றிய யோசனையால் உதித்த படம் தான் திருவிளையாடல். அந்த படத்தில் முதலில் சம்மதித்து என்ன வேடம் என கேட்க சிவன் வேஷம் என சொன்னதும் சிவன் வேடமா? அதுவும் நானா என மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : முதல்வரே காக்க வைக்காத கண்ணதாசன்… சந்திரபாபு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த கொடுமை…
அதன் பின் கே.பி. நாகராஜன் மிகவும் வற்புறுத்தவே மனமில்லாமல் தான் நடித்தாராம். ஒரு காட்சியில் சிவனுக்கும் நக்கீரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படும். அந்த நக்கீரன் கதாபாத்திரத்திற்காக ஆள் தேடும் பணியில் இருந்திருக்கிறார் கே.பி.மகாராஜன். கண்ணதாசனை கேட்டிருக்கிறார் அவரும் செட் ஆகவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ஏன் நீங்களேன் நடிங்க என்று கூறினாராம். ஆனால் கே.பி. நாகராஜன் முடியாது என சொன்னாராம். அதற்கு சிவாஜி நீங்க நக்கீரன் இல்லையென்றால் நான் சிவனும் இல்லை என சொன்னாராம். பிறகு தான் அந்த நக்கீரன் கதாபாத்திரத்தை இயக்குனர் கே.பி. நாகராஜனே அற்புதமாக பண்ணியிருப்பார்.