கொஞ்சம் கூட எதிர்பாராத சம்பவம்!.. சிவாஜி நடித்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிச்சைக்காரன்!..
ஒரு சமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகர் மேஜர் சுந்தராஜனும் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிக்னல் போடப்படவே கார் நிறுத்தப்பட்டது. அப்போது சிக்னலில் இரு முதியவர் டிபி நோயால் பாதிக்கப்பட்டு ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம்.
இதை சாதாரணமாக கவனித்து விட்டு சிக்னலும் முடிய காரும் புறப்பட்டு விட்டதாம். இது நடந்து சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு ஒரு படவாய்ப்பு வந்ததாம். மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த ‘ஓடையில் நின்னு’ என்ற தமிழ் பதிப்பினை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்க ‘பாபு’என்ற பெயரில் படமாக்கப்பட்டது.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் உருகி உருகி காதலித்த டாப் ஹீரோயின்… ஆனா கடைசில என்ன ஆச்சு தெரியுமா??
அந்த படத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து சௌகார் , வெண்ணிறாடை நிர்மலா நடித்திருந்தனர். 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த பாபு படத்தில் முதலில் இளைஞனாக வரும் சிவாஜி கடைசி காலத்தில் டிபி நோயால் பாதிக்கப்பட்ட முதியவராக மாறிவிடுவாராம்.
இதை அப்படியே அன்று சிக்னலில் பார்த்த அந்த பிச்சைக்காரனை போல் பிரதிபலித்து நடித்தாராம் சிவாஜி. இதை பார்த்த மேஜருக்கு ஆச்சரியம் தாங்க வில்லையாம். சாதாரணமாக பார்த்த ஒரு பிச்சைக்காரனை இந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டு சிவாஜி நடித்ததை எண்ணி மிகவும் ஆச்சரிப்பட்டு போனாராம்.
இதையும் படிங்க :மனுஷன் திருக்குறளையும் விட்டு வைக்கல!. எட்டு திருக்குறளை ஒரே பாடலில் வைத்த கண்ணதாசன்!..
படம் பார்த்து வெளியே வந்தவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடாத குறையாக வந்தார்கள். அப்படி வந்தால் தான் சிவாஜி படத்திற்கே ஒரு மரியாதை. படமும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தது. 100 நாள்கள் வெற்றிகரமாக ஓடி சாதனையும் படைத்தது. படத்தில் அமைந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இதை முன்பு ஒரு பேட்டியில் மேஜர் சுந்தராஜன் கூறினார். மேலும் சிவாஜி கதைக் கேட்கும் போதே தூங்கிக் கொண்டிருந்தாலும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிப்பவர். நடிப்பு அரக்கனாக வாழ்ந்தவர் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்து சும்மா விட்டிருப்பாரா என்ன? அதை தத்ரூபமாக காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் சிவாஜி.