சிவாஜியின் நூல் வெளியீட்டு விழா.. கவிஞருக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வையாளர்கள்..மேடையில் பிரபு செய்த காரியம்!..
தமிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு தலைசிறந்த நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரை பற்றி அறியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். தமிழின் உச்சரிப்பு தெரியவேண்டும் என்றால் அவர் நடித்த படங்களை பார்த்தாலே போதும்.
அந்த அளவுக்கு தன்னுடைய அற்புதமான நடிப்பாலும் அழகான உச்சரிப்பாலும் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்த விசித்திரமான நடிகர் சிவாஜி கணேசன். இவரை பற்றி பல நாள் ஆராய்ச்சி செய்து கிட்டத்தட்ட 1600 பக்கங்களை கொண்ட ஒரு நூலை மருது மோகன் என்பவர் எழுதியிருக்கிறார்.
அந்த நூல் வெளியீட்டு விழா தான் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு சினிமா உலகில் இருந்து இளையராஜா, பாரதிராஜா, பிரபு, ராம்குமார், மற்றும் விக்ரம் பிரபு உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பல படங்களுக்கு மேல் பாட்டு எழுதிய கவிஞர் முத்துலிங்கம் மேடையில் பேசினார்.
இதையும் படிங்க : ரஜினியை பார்த்து பைத்தியம் என்று கத்திய நபர்… சட்டையை பிடித்து வெளியே துரத்திய முன்னணி நடிகை…
பேசியவர் முழுக்க முழுக்க இளையராஜாவை பற்றியும் அவரின் அற்பணிப்பு பற்றியும் அவருக்கு மத்திய அரசால் கிடைத்த அங்கீகாரத்தை பற்றியும் கிட்ட்த்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார். மேலும் பேசும் போது என்னால் கால விரயம் ஆனாலும் பொருத்துக் கொள்ளுங்கள் என்றும் மேலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கோபத்தில் பொங்கி எழுந்த பார்வையாளர்கள் சிவாஜியை பற்றி பேச சொன்னால் வேறு ஏதோ ஏதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பலரும் கூச்சலிட்டனர். அதற்கு முத்துலிங்கம் சிவாஜியை பற்றி பேச தான் நிறைய பேர் இருக்கிறார்களே, அவர்கள் பேசட்டும் என்றும் சொல்ல பார்வையாளர்களுக்கு கோபம் தாங்கவில்லை.
உடனே கவிஞர் முத்துலிங்கம் கோபத்தில் அட போங்கய்யா என்று பாதியிலேயே போய்விட்டார். உடனே மேடையில் இருந்த பிரபு எழுந்து நின்று பார்வையாளர்களின் முன் கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருக்க சொன்னார்.