ஏவிஎம் படத்தில் நடிக்க விநோதமான கன்டிஷனை போட்ட சிவாஜியின் தம்பி.. ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை…
1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “உயர்ந்த மனிதன்”. இத்திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தனர். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்திற்கு சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி ஏவிஎம் நிறுவனத்தார் சிவாஜி கணேசனை அணுகினர். சிவாஜி கணேசனும் அதில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டார்.
எனினும் சம்பள விஷயத்தை குறித்து தனது தம்பியான சண்முகத்திடம் பேசிக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். சிவாஜியின் சம்பள விஷயத்தை அந்த காலகட்டத்தில் அவரது தம்பி சண்முகம்தான் முடிவு செய்து வந்தார்.
சிவாஜி கணேசன் அறிமுகமான “பராசக்தி” திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தார்தான் உருவாக்கினார்கள். ஆதலால் ஏவிஎம் நிறுவனத்தின் மேல் சண்முகத்திற்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு.
இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனத்தார் சண்முகத்திடம் “எவ்வளவு சம்பளம் வேண்டும்” என்று கேட்டப்போது, “அண்ணன் உங்ககிட்ட சம்பளத்தை குறித்தே பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆதலால் நீங்கள் என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளச் சொன்னார்” என கூறியிருக்கிறார்.
சண்முகம் அவ்வாறு கூறினாலும் அன்றைய மார்க்கெட்டுக்கு சிவாஜி கணேசன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ அந்த தொகையை சம்பளமாக கொடுப்பதுதானே நியாயம் என்று ஏவிஎம் நிறுவனத்தார் முடிவு செய்தனர். அதன்படி அக்காலகட்டத்தில் சிவாஜி கணேசன் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்ததாக தெரியவந்தது.
மேலும் அந்த காலகட்டத்தில் வண்ணத்திரைப்படங்கள் பல உருவாகி வந்தன. ஆனால் “உயர்ந்த உள்ளம்” திரைப்படம் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம். ஆதலால் சிவாஜி கணேசனுக்கு ரூ.50,000 குறைத்து ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதனை சண்முகத்திடம் கூறினார்கள்.
சண்முகமும் அந்த தொகையை ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது “இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகுதான் சம்பளத்தை கொடுக்க வேண்டும், அதற்கு முன்பு நீங்கள் ஓரு ரூபாய் கூட முன்பணமாக தரவேண்டாம்” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திய நிறுவனம் என்பதால் சிவாஜி கணேசன் மிகவும் பண்போடு நடந்துகொண்டுள்ளார் சிவாஜி கணேசன்.
இதையும் படிங்க: சிம்புவுக்கு பட வாய்ப்புகள் இல்லையா? புரியாத புதிரா இருக்கேப்பா!..