முதல் ஆளா நிக்கிறவரு சிவாஜி!..படப்பிடிப்பிற்கு தாமதமானதால் பரிகாரமா என்ன செஞ்சாருனு தெரியுமா?..
நடிப்பு தான் மூச்சு, நடிப்பு தான் வாழ்க்கை என நடிப்பை மட்டும் கடவுளாக எண்ணிக் கொண்டிருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக தன் சினிமா பயணத்தை கடந்தவர் சிவாஜி.
80, 90களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த சிவாஜி அவர் ஹீரோவாக நடித்த முதல் மரியாதை படம் சக்கப்போடு போட்டது. இந்த வயசுலயும் கதாநாயகனாக நடித்து வெற்றிவிழாவும் கொண்டாடியது சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது முதல் மரியாதை திரைப்படம்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அந்த நேரத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ராதா. அவரும் தன் நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அந்த படப்பிடிப்பின் போது சூர்ய உதயத்திற்கு முன் சில காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டு சிவாஜியையும் ராதாவையும் அதிகாலை 3 மணி அளவிற்கு வரச்சொன்னார் பாரதிராஜா. மணி 3ஆச்சு, 4 ஆச்சு, 5, 6 என நேரம் கடந்து கொண்டே இருந்தது.
6மணி அளவில் ஒரு காரில் ராதா இறங்கினார். கடும் கோபத்தில் இருந்த பாரதிராஜா ராதாவை கண்டபடி திட்டினார். காருக்குள் சிவாஜி இருந்ததை கவனிக்காமல் திட்டிய பாரதிராஜாவை சிவாஜி அந்த பொண்ணை ஏன் திட்டுற? நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தண்ணீர் வர வில்லை. பின்ன நாங்கள் எப்படி குளிக்கிறது. அதான் லேட் ஆயிடுச்சு என சிவாஜி சொன்னதை கேட்டு பாரதிராஜா அமைதியானார். மேலும் அன்றைக்கு தாமதமாக வந்ததால் கிட்டத்தட்ட 19 மணி நேரம் அன்று முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் சிவாஜி.