‘மோட்டா சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிக்கு வைத்த செக்!.. இயக்குனர் போட்ட பலே திட்டம்!..
சிவாஜியின் நடிப்பில் மிகவும் பிரமிக்க வைத்த படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. 37 வயதில் 13 குழந்தைகளுக்கு அப்பாவாக மிகவும் துணிச்சலாக சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்த படம்தான் இது. வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக மோட்டார் சுந்தரம் பிள்ளை படம் அமைந்தது.
ஒரு பெரிய கமெர்ஷியல் நடிகராக இருந்த சிவாஜி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததே ஒரு சவாலான காரியம் தான். இப்ப உள்ள தலைமுறைகள் ஒர் குழந்தைக்கு அப்பாவாக நடித்தால் தனது மார்கெட் போய்விடும் என பயந்து நடிக்க மறுத்து விடுகின்றனர்.
ஆனால் சிவாஜியோ பத்து குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். பெரிய பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தயாரான அந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்பே சிவாஜி தான். இந்த படத்தை இயக்கிய எஸ்.எஸ்.வாசன் படத்தின் மற்ற நடிகர்களுக்கு தேவையான ஸ்கிரிப்ட்களை எல்லாம் கையில் முன்னதாகவே கொடுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க : விஜயகாந்தின் காதலுக்கு வில்லன்களாக இருந்த அந்த பிரபலங்கள்!.. நடிகையை பிரிந்ததே இதனால் தானாம்!..
கொடுத்து நன்றாக ரிகர்சல் செய்து கொள்ளுங்கள், படப்பிடிப்பு சமயத்தில் உங்கள் எல்லாரையும் என்னால் கவனிக்க முடியாது. என் கவனம் முழுவதும் சிவாஜியின் மீது மட்டுமே இருக்கும் என சொல்லி ரிகர்சல் செய்து பார்க்க சொல்லியிருக்கிறார்.
ஏனெனில் இந்த படத்தில் சிவாஜியின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கிய கதாபாத்திரம். எல்லா குழந்தைகளையும் பேணிக் காப்பதில் இருந்து இடையிடையே வரும் கஷ்டங்களையும் குடும்ப தலைவனாக தாங்கி கொள்ளும் பொறுப்பையும் நடிப்பில் ஏற்று நடிக்க வேண்டும்.
இதையும் படிங்க : மருத்துவமனையில் அஜித்… வேறு நடிகரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
சிவாஜியின் நடிப்பு இந்த படத்தில் மேலும் பேசப்படும் என கருதியே வாசனின் முழுக்கவனமும் சிவாஜியின் மேலேயே இருந்திருக்கிறது. நினைத்தப்படி சிவாஜி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்ப்பார். படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சௌகார் ஜானகி நடித்திருப்பார். சிவாஜிக்கு அக்காவாக பண்டரி பாய் நடித்திருப்பார். மேலும் ஜெயலலிதா, காஞ்சனா, சச்சு போன்றோர் சிவாஜியின் மகள்களாக நடித்திருப்பர்.