எம்.ஜி.ஆர் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. சிவாஜி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன நண்பர்..
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரையுலக ஜாம்பவான்களாக இருந்தவர்கள். இருவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள். அண்ணன் - தம்பியாக பழகியவர்கள். சிவாஜியை எம்.ஜி.ஆர் எப்போதும் ‘தம்பி கணேசா’ என்றே அழைப்பார். சிவாஜியும் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடித்தார். அதாவது அவர் படம் எனில் மல்யுத்த சண்டை காட்சி, வாள் சண்டை என எல்லாமே இருக்கும். சரித்திர கதைகளில் நடித்தும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். ஆனால், சிவாஜியோ நடிப்புக்கு தீனி போடும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்ப படங்களில் நடித்தார். சோக காட்சிகளெல்லாம் உருகி உருகி நடிப்பார். ஆனால், எம்.ஜி.ஆரே சாதாரணமாக நடித்து தனது படங்களை ஓட வைத்தார்.
இதையும் படிங்க: அந்த வேடத்தில் நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி!.. நடிகர் திலகத்துக்கே இப்படி ஒரு நிலையா?..
பொதுவாக எல்லோரும் சொல்வது என்னவெனில் ‘எம்.ஜி.ஆரை விட சிவாஜியே சிறந்த நடிகர்’ என்பதுதான். பல மேடைகளில் சிவாஜியே சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறார். சிவாஜியை எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார். அதேநேரம் எம்.ஜி.ஆரின் நடிப்பை பற்றி சிவாஜியின் மனதில் என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
சென்னை கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரம் சிவாஜியுடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை அவர் சிவாஜியிடம் ‘எம்.ஜி.ஆரின் நடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?’ என கேட்டாரம். மனதுக்குள் எப்படியும் எம்.ஜி.ஆரின் நடிப்பை சிவாஜி மட்டமாகத்தான் பேசுவார் என சிதம்பரம் நினைத்தாராம். ஆனால், சிவாஜி சொன்னது வேறு எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். நான் எனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறேன். அவரின் படங்களில் அவர் ஊருக்காக உழைப்பார். என்னுடைய படங்கள் குடும்ப படங்கள். அவருடையை பாணி படங்களில் எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர். அந்த பாணி கதைகளில் அவர் பெரிய நடிகர்’ என எம்.ஜி.ஆரை பாராட்டினாராம்.
போட்டி நடிகர்களாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்தும், புரிந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் செய்த அந்த காரியம்..!பதறி ஓடி வந்த தயாரிப்பாளர்..!என்ன நடந்தது தெரியுமா..?