நடிப்பு சரி இல்லை எனச் சொன்ன இயக்குனர்.. அவரையே வாயடைக்க வைத்த சிவாஜி கணேசன்...
நடிகர் திலகம் எனப் போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். அவர் நடிப்பினை பார்த்து மயங்காதவர் யாரும் இல்லை. ஆனால் அவர் நடிப்பிலே குறை கண்டுபிடித்திருக்கிறார் ஒரு இயக்குனர்.
பேசும் தெய்வம் படத்தினை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அதில் சிவாஜி கணேசன் நாயகனாக நடித்து வந்தார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு காட்சியில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும்,இயக்குனர் ஒன்ஸ் மோர் என்றார். இது பலருக்கு அதிர்ச்சியானது.
ஆனால், சிவாஜி மீண்டும் நடித்தார். தொடர்ந்து, இயக்குனர் ஒன்ஸ் மோர் என்றார். இப்படி ஒன்ஸ் மோர் சொல்ல சிவாஜி நடிக்க என 6 டேக்குகள் சென்று விட்டது. அங்கிருந்தவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே சிவாஜி இயக்குனரிடம் சென்று எனக்கு தெரிந்தவரையில் இந்த காட்சியை நடித்து விட்டேன். உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரிந்தால் எளிதாக இருக்கும். நீங்கள் நடித்து காட்டுங்கள் என்றார். இயக்குனரும் அசரவில்லை.
இதையும் படிங்க: சிவாஜி கணேசன் செயலால் அசிங்கப்படும் இளம் நாயகர்கள்… மாறுங்கோ இல்ல கஷ்டம் தான்..
அவரும் அந்த காட்சியை நடித்து காட்டினாராம். அதை சற்று நேரம் பார்த்த சிவாஜி கணேசன், உடனே காருக்கு சென்று வீட்டுக்கு கிளம்பிவிட்டாராம். இது இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் தம்பி கே.எஸ். சபரிநாதன் அலறியடித்துக்கொண்டு செட்டுக்கு ஓடி வந்தார். இன்று தான் கடைசி கால்ஷூட் தேதி. நாளையில் இருந்து அவர் வேறு ஒரு படத்திற்கு நடிக்க சென்று விடுவார்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவரை பிடிக்க முடியாதே. ஒரு காட்சிக்காக படம் நிற்க போகிறது என பிதற்றி இருக்கிறார். இது கோபாலகிருஷ்ணனுக்கு கலக்கமாகி இருக்கிறது. காட்சிக்காக தானே அப்படி செய்தோம் என வருத்தப்பட்டாராம். அப்போது இரவில் அவர்களுக்கு ஒரு கால் வந்திருக்கிறது. சிவாஜி காலை 7 மணிக்கு உங்கள் ஷூட்டிங்கிற்கு வருவார் என்றார்களாம்.
அடுத்த நாள் படப்பிடிப்பில், சிவாஜி நடித்து கொடுத்தார். அதை பார்த்த இயக்குனர் சூப்பர் சார். இதை தான் நான் எதிர்பார்த்தேன் எனக் கூறினார். அதை கேட்ட சிவாஜி, எனக்கு நீங்கள் நடித்ததை பார்த்ததும், நம்மால் ஏன் இவரை போல நடிக்க முடியவில்லை எனக் ஏக்கம் உருவானது. அதனால் தான் வீட்டிற்கு சென்றேன். தொடர்ந்து, கண்ணாடி முன் நின்று நீங்கள் நடித்தது போல நடித்து பார்த்தேன். எனக்கே திருப்பி ஏற்பட்டதும் தான் இங்கு வருவதாக கூறினேன் என்றாராம். என்ன ஒரு அர்ப்பணிப்பு!