சிவாஜி 7 வேடங்களில் கலக்கிய படம்.. இது யாருக்காவது தெரியுமா?..

sivaji
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தான் சொல்லவருவதை உணர்ச்சிப் பெருக்கோடு வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர் சிவாஜி. பராசக்தியில் தொடங்கி படையப்பா வரை அவரின் புகழ் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
ஒருவரின் பெருமை அவர் இல்லாத போதுதான் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால் இவரை பொருத்தவரைக்கும் அவர் இருக்கும் போதும் சரி இல்லாத போதும் சரி நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் சிவாஜியின் படங்களை பார்த்தாலே போதும். அவரின் பாதிப்பு கண்டிப்பாக வந்து விடும்.

sivaji1
அந்த அளவுக்கு எல்லா உணர்ச்சிகளையும் சரியான விதத்தில் காட்டக்கூடியவர். ஆக்ஷனுக்கு எம்ஜிஆர் என்றால் சென்டிமென்டுக்கு சிவாஜி என்றே சொல்லலாம். குடும்ப உறவுகளை மதிக்கும் முறையை தன் நடிப்பின் மூலம் அழகாக எடுத்துரைப்பார் சிவாஜி. ஏகப்பட்ட படங்கள் இன்றளவும் ஒரு காவியமாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில் அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படம் என்றால் அது நவராத்திரி. இந்த படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.மேலும் இந்த படத்தில் அவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். அதற்கு முன் அவர் 3 வேடங்களில் ஒரு படத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க : திறமை இருந்தும் பயன்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிம்பு!.. அவருக்கு உள்ள இடம் இது இல்ல.. பிரபல இயக்குனர் ஒபன் டாக்!..
ஆனால் 7 வேடங்களில் ஒரு படத்தில் நடித்தாராம் சிவாஜி. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் வரிகளில் ஏ.எஸ்.பிரகாஷம் கதையில் சிவாஜி நடித்த படம் ‘ஏழு ஜென்மங்கள்’ என்ற திரைப்படம். இந்த படத்தின் கதை ஒவ்வொரு ஜென்மத்திலும் தலைவன் தலைவியின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது? எப்படி சமாளிக்கிறார்கள்? என்பது பற்றிய கதைதானாம்.

sivaji2
படம் முக்கால் வாசி எடுத்த நிலையில் தயாரிப்பாளரின் பண நெருக்கடி பிரச்சினையால் அந்த படம் அப்படியே நின்று விட்டதாம். இதனால் மிகுந்த மனமுடைந்த பிரகாஷம் சிவாஜி படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று இருந்த நிலையில் அவரை சிவாஜி அழைத்து ஒரு நாள் கண்டிப்பாக நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்தாராம்.
ஆனால் அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் இருந்த பிரகாஷத்திற்கு அதிர்ஷ்டம் கதவை திறந்தது. பிரகாஷம் இயக்கத்தில் சிவாஜி. பிரபு, நளினி நடிக்க சாதனை என்ற படம் தயாராகி வெளியானது.